புஷ்கர விழா ரதயாத்திரையை தொடங்கி வைத்தார்- டாக்டர் கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி (கோப்புப் படம்)

 • News18
 • Last Updated :
 • Share this:
  தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு ரத யாத்திரையை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கொடிசையத்து தொடங்கி வைத்தார்.

  புஷ்கர விழா ஏன்..?

  குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி ஆற்றுக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

  ரதயாத்திரை

  இந்த புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய மகாபுஷ்கர விழாவாகும்.  இந்நிகழ்வை  முன்னிட்டு நீர், நதி, மண் ஆகிய இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தும் விழிப்புணர்வு ரத யாத்திரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து தாமிரபரணிக்கு புறப்பட்டது. 12 ரதங்களின் ஊர்வலத்தை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி  ஆகியோர் விஷ்வ இந்து பரிஷித்தின் கொடியை அசைத்து துவக்கி வைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, நாகரீகம் உருவான நதிகளை வணங்கி போற்றும் புஷ்கர விழாவில் தான் பங்கேற்பதில் பெருமை அடைவதாக கூறினார். மேலும், இதுபோன்ற விழாவை தாமிரபரணி நதிக் கரையில் புதிய தமிழகம் கட்சியும் தனி விழாவாக நடத்தும் என்று கூறினார்.
  Published by:Saroja
  First published: