குடிக்கு எதிராக விழிப்புணர்வு - தமிழக அரசு 4 கோடி நிதி ஒதுக்கீடு

செந்தில்பாலாஜி

மது அருந்துதலுக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரச்சாரம் மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்த அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

 • Share this:
  மது அருந்துதல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

  தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் விற்பனை பணியாளர்கள் 25009 பேர் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள் அவர்களுக்கு மாத தொகுப்பூதியம் 500 ரூபாய் கூடுதலாக ஏப்ரல் 2021 முதல் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் 25,000 ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

  Also Read: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு - சட்டப்பேரவையில் அறிவிப்பு

  தமிழகத்தில் மது அருந்துதலுக்கு மக்கள் அடிமையாகாமல் இருக்கவும், அவ்வாறு மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனும், மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ள, மாவட்டந்தோறும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்த அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்துடன், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும்  இணைந்து மேற்கொள்ள ரூ 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: