தமிழ்நாடு - புதுச்சேரி மண்டலத்தில் அதிகமாக வருமான வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு, விருது வழங்கப்பட்டுள்ளது.
வருமான வரி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு - புதுச்சேரி மண்டலத்தில் அதிகளவில் வருமான வரி செலுத்தியவர்கள், வருமானவரித்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்ப்பேட்டை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், வருமானவரித் துறை அதிகாரிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், தமிழ்நாடு - புதுச்சேரி மண்டலத்தில் அதிகளவில் வருமானவரி செலுத்திய 4 பேருக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார் ஆளுநர் தமிழிசை.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்துக்கும், அதிகமான அளவில் வருமான வரி செலுத்தியதற்காக, விருது வழங்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்தின் சார்பில், அவரது இளைய மகள் சௌந்தர்யா, ஆளுநர் தமிழிசையிடம் இருந்து விருதை பெற்றுக்கொண்டார்.
பின்னர் மேடையில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல என்றும், அவர் Super Tax Payer", என்றும் புகழாரம் சூட்டினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தொடர்ந்து பேசிய தமிழிசை, "பிரதமர் நரேந்திர மோடியின் தொடர் முயற்சியால், பொதுமக்கள் முறையாக வரி செலுத்த முன்வந்துள்ளதாகவும், அனைவரும் கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும் என்றும், அரசுக்கு வரியை முறையாக செலுத்தாவிட்டால், நாம் இருப்பதையும் இழந்துவிடும் சூழல் ஏற்படும்", என்றும் குறிப்பிட்டார்.
வருமான வரி செலுத்த கடைசி நாள் என்று ஒரு தேதியை அறிவித்தாலும், மக்கள் கால நீட்டிப்பை எதிர்பார்ப்பதாக கலகலப்பூட்டிய தமிழிசை, கிராமப்புற பள்ளிகளை மேம்படுத்த வருமானவரித்துறை மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதாகவும், வருமான வரி செலுத்துவதன் அவசியம் பற்றி பள்ளி மாணவர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் 2025-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடைய, பிரதமர் மோடி உழைத்துக்கொண்டிருப்பதாகவும் பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Income tax, Rajinikanth, Soundarya Rajinikanth, Tamilisai Soundararajan