Home /News /tamil-nadu /

ஆவின் பால் விலை தள்ளுபடி.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஆவின் பால் விலை தள்ளுபடி.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஆவின் பால்

ஆவின் பால்

ஆவினின் அடையாளமாக பொதுமக்களுக்கு அதிகபட்ச விலையில் இருந்து மேலும் குறைத்து சலுகை விலையில் பால் அட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கடந்த 16.05.2021 முதல் ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. இந்த விலைக்குறைப்பு பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ஆவின் பால் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளது.

    ஆவினின் அடையாளமாக பொதுமக்களுக்கு அதிகபட்ச விலையில் இருந்து மேலும் குறைத்து சலுகை விலையில் பால் அட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விவரம் கீழ்கண்டவாறு:

    சமன்படுத்தப்பட்ட பால் (நீலம்) :
    அதிகபட்ச விற்பனை விலை லிட்டருக்கு 40 ரூபாய்பால் அட்டை விற்பனை விலை லிட்டருக்கு 37 ரூபாய்

    நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை):
    அதிகபட்ச விற்பனை விலை லிட்டருக்கு 44 ரூபாய்பால் அட்டை விற்பனை விலை லிட்டருக்கு 42 ரூபாய்

    நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு):
    அதிகபட்ச விற்பனை விலை லிட்டருக்கு 48 ரூபாய்பால் அட்டை விற்பனை விலை லிட்டருக்கு 46 ரூபாய்

    தற்போது வரை சென்னையில் சுமார் 6 லட்சம் குடும்பங்கள் பிரதி மாதம் பால் அட்டையை சலுகை விலையில் (மாதம் லிட்டர் ஒன்றுக்கு ரூ.60 முதல் ரூ.90 வரை சேமிப்பு) பெற்று பயனடைந்து வருகின்றனர்.

    மேலும் அனைத்து பொது மக்களும் இத்தகைய சலுகையை பெற ஜனவரி மாதம் முழுவதும் ஆவின் வட்டார அலுவலகங்கள், பால் நுகர்வோர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஆவின் அதிநவீன பாலகங்கள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

    Also Read : சென்னையில் பெய்த பேய் மழைக்கு என்ன காரணம்? வானிலை மையம் விளக்கம்

    ஆவின் பால் அட்டையை பெற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை விண்ணப்பத்துடன் சேர்த்து சமர்ப்பிக்கும் பட்சத்தில் உடனடியாக பால் அட்டை வழங்கப்படும். பாலகங்களில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு மட்டும் மறுநாள் ஆவின் வட்டார அலுவலர்கள் மூலம் பால் அட்டை வழங்கப்படும். மேலும், இணையதளம் வாயிலாகவும் புதிய பால் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். www.aavin.tn.gov.in & www.aavinmilk.com

    இந்த சலுகை பால் அட்டை பொது மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எந்தவொரு தனியார் நிறுவனங்களுக்கும் வழங்கப்படாது.  எனவே அனைத்து பொது மக்களும் ஆவின் பால் அட்டையை சலுகை விலையில் பெற்று கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் பொருளாதாரத்தை உயர்த்திடும் பணியிலும் நுகர்வோர்கள் ஆவின் நிறுவனத்துடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றது.

    மேலும் நுகர்வோர்கள் பால் அட்டை சலுகை குறித்த தங்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை 18004253300 எனும் கட்டணமில்லா தொலைபேசி மூலமாகவும் தெரிவிக்கலாம். நுகர்வோர்கள் பண்டிகை நாட்களில் பால் மற்றும் பால் உபபொருட்களின் முன்பதிவு குறித்த தகவல்களை தொலைபேசி எண் 044-23464578-579-580 மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று தமிழ அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Aavin, TN Govt

    அடுத்த செய்தி