Home /News /tamil-nadu /

அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் பரிசு பெற்றவர்களின் விவரம்!

அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் பரிசு பெற்றவர்களின் விவரம்!

Jallikattu 2022 |  சிறந்த காளைக்கான முதல் பரிசாக மணப்பாறையை சேர்ந்த தேவசகாயத்திற்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

Jallikattu 2022 | சிறந்த காளைக்கான முதல் பரிசாக மணப்பாறையை சேர்ந்த தேவசகாயத்திற்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

Jallikattu 2022 | சிறந்த காளைக்கான முதல் பரிசாக மணப்பாறையை சேர்ந்த தேவசகாயத்திற்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

    அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் முதலிடம் பெற்றவருக்கு காரும், சிறந்த காளைக்கு இருசக்கர வாகனமும் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் திருவிழாவையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி கொரோனா பரவல் காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியைக் காண மொத்தமே 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆன் லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட 300 மாடுபிடி வீரர்களும், 600 காளைகளும் பங்கேற்றன.

    அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் சிறப்பான காளைகள், காளையர்களுக்கு கார் பரிசளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல் முறையாக இந்த ஜல்லிக்கட்டில் கார் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    Also read: அவனியாபுரம் ஜல்லிகட்டு: 24 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை தட்டிச் சென்றார் மாடுபிடி வீரர் கார்த்திக்

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் வழங்கப்படுவதாகவும், இதே போல சிறந்த காளைக்கான பரிசாக, சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பாக இருசக்கர வாகனம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

    அந்தவகையில், 24 காளைகளை பிடித்து அவனியாபுரம் வீரர் கார்த்திக், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் வழங்கப்பட்ட முதல் பரிசான காரை தட்டிச் சென்றார்.

    இரண்டாவது இடம் பிடித்த முருகனுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 3வது இடம் பிடித்த பரத்குமாருக்கு பசுங்கன்று பரிசாக வழங்கப்பட்டது.

    இதேபோல், சிறந்த காளைக்கான முதல் பரிசாக மணப்பாறையை சேர்ந்த தேவசகாயத்திற்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

    2வது இடம் பிடித்த காளை உரிமையாளருக்கு பசுங்கன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 3வது இடம் பிடித்த காளை உரிமையாளருக்கு மிதிவண்டி பரிசாக வழங்கப்பட்டது.

    தொடர்ந்து, விழா முடிவில் வர்ணனையாளர்களுக்கு தங்கக்காசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

    Also read: ரவுடி படப்பை குணாவுக்கு உதவியதாக 40 காவலர்கள் பணியிட மாற்றம் - டி.ஜி.பி அதிரடி உத்தரவு
    Published by:Esakki Raja
    First published:

    அடுத்த செய்தி