Home /News /tamil-nadu /

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: கார், பைக் பரிசு வழங்கும் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: கார், பைக் பரிசு வழங்கும் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி

Jallikattu

Jallikattu

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கான முதல் பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் வழங்கப்பட இருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையருக்கு பரிசாக அளிக்கப்பட இருக்கும் காரை முதல்வர் ஸ்டாலினும், சிறந்த காளைக்கு வழங்கப்பட இருக்கும் இருசக்கர வாகனத்தை உதயநிதி ஸ்டாலினும் வழங்கியுள்ளனர்.

    உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, இந்த ஆண்டு கொரோனா கட்டுபாடுகளுடன் நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டிகள் மாலை 4 மணியுடன் நிறைவு பெற இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி 150 பார்வையாளர்கள் மட்டுமே போட்டியை காண அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக ஒரு சுற்றுக்கு 75 முதல் 100 வீரர்கள் அனுமதிக்கப்படுவர் ஆனால் தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்தப் போட்டியில் நாட்டு மாடுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. சுமார் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Also read:  Jallikattu 2022- Live | அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரலை

    ஜல்லிக்கட்டில் பங்கேற்று காளையை அடக்கும் மாடுபிடி வீரர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தலைமையில் உறுதி மொழி எடுத்து போட்டியை தொடங்குகின்றனர். அமைச்சர்கள் மூர்த்தி, PTR பழனிவேல் தியாகராஜன், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஆகியோர் ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அமைச்சர் மூர்த்தியின் காளையான வெள்ளையன் களம் கண்டது. மொத்தம் 600 மாடுகள் களம் காண்கின்றன, 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் வழங்கப்பட இருக்கிறது. இதே போல சிறந்த காளைக்கான பரிசாக, சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பாக இருசக்கர வாகனம் வழங்கப்பட இருக்கிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கார் பரிசாக வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    prize


    இதுதவிர காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் டிவிஎஸ் எக்ஸ்.எல், தங்க, வெள்ளி நாணயங்கள், வேஷ்டி, சட்டை, பீரோ, வாஷிங் மெஷின், சேலைகள், சீலிங் ஃபேன், அண்டா, சைக்கிள்கள், பானை, கட்டில், ஹோம் தியேட்டர், மிக்ஸி, மொபைல் போன்கள், ஏர் கூலர், கரண்ட் அடுப்பு. கிஃப்ட் பாக்ஸ் என ஏராளமான பரிசுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    அவனியாபுரத்தை தொடர்ந்து நாளை பாலமேட்டிலும், வரும் ஜனவரி 17ம் தேதியன்று அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Arun
    First published:

    Tags: Jallikattu

    அடுத்த செய்தி