• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • "ஜல்லிக்கட்டில் ஜாதி, மதத்தை திணிக்கக்கூடாது" வேதனையுடன் கூறிய நீதிபதி

"ஜல்லிக்கட்டில் ஜாதி, மதத்தை திணிக்கக்கூடாது" வேதனையுடன் கூறிய நீதிபதி

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

விழா மேடையில் அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய மரியாதை செலுத்தப்படும் என்றும், விழாக் குழுவில் வேறு எவரையும் சேர்க்க முடியாது என்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுத் தலைவர் கண்ணன் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அவனியாபுரத்தில், ஜல்லிக்கட்டு நடத்துவதில் இழுபறி நீடிக்கிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எட்டப்படாத நிலையில், ஜல்லிகட்டுப் போட்டியில் ஜாதி மதங்களை திணிப்பது வேதனை அளிப்பதாக மதுரை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் நாளன்று, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதை நடத்துவதில், சமூக பிரிவினைகள் உள்ளதாகவும், பாகுபாடின்றி போட்டி நடைபெற அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த விழாக்குழுவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி முனியசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம், ஜல்லிக்கட்டில் ஜாதி, மதங்களை திணித்து, சுய கவுரவம் அடைய நினைப்பது வேதனை என்றும் இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி விசாரணையை ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ஆட்சியர் தலைமையிலான கூட்டம்:

இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன், இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு தரப்பினரும் தங்கள் நிலையில் உறுதியாக இருப்பதாகவும், நீதிமன்றம் கேட்டால் அரசு தரப்பு கருத்தை தெரியப்படுத்துவோம் என்றார்.

விழாக்குழுவில் வேறு எவருக்கும் இடமில்லை

அவனியாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜல்லிக்கட்டு விழாக் குழுத் தலைவர் கண்ணன், விழா மேடையில் அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய மரியாதை செலுத்தப்படும் என்றும், விழாக் குழுவில் வேறு எவரையும் சேர்க்க முடியாது என்றார்.

Also see... மெமொ வாங்கியதால் ஆத்திரம்...! பெண் பயணியைத் தாக்கிய நடத்துநர் - 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: