தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ஒரேநாளில் கொட்டித்தீர்த்த மழை!

News18 Tamil
Updated: August 9, 2019, 12:34 AM IST
தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ஒரேநாளில் கொட்டித்தீர்த்த மழை!
News18 Tamil
Updated: August 9, 2019, 12:34 AM IST
தமிழக வரலாற்றில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் சாதனை அளவாக ஒரே நாளில் 82 சென்டிமீட்டர் மழை பதிவானது.

தமிழகத்தில் மேற்கு மாவட்டங்கள் குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நீலகிரியில் நேற்று முன்தினம் காலை வரை ஒரே நாளில் 137 சென்டிமீட்டர் மழை பதிவானது. அதிகபட்சமாக, அவலாஞ்சியில் 42 சென்டிமீட்டர் மழை பொழிந்தது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை கொட்டோ கொட்டோ என கொட்டுகிறது.


அவ்வகையில் அவலாஞ்சியில் 82 சென்டிமீட்டர் மழையும், முக்குர்த்தியில் 33 சென்டிமீட்டரும், மேல்பவானியில் 30 சென்டிமீட்டரும், கூடலூரில் 24 சென்டிமீட்டரும், தேவாலாவில் 21 சென்டிமீட்டரும் மழை பதிவானது. கோவை மாவட்டம் சின்னகல்லாறில் 22 சென்டிமீட்டர் மழை பொழிந்தது.

அவலாஞ்சியில் கொட்டிய கனமழையே தமிழகத்தில் ஒரே நாளில் பதிவான சாதனை மழை அளவாகும். இதற்கு முன்பு, நீலகிரி மாவட்டம் கேத்தியில், 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி, இதே 82 சென்டிமீட்டர் மழை பதிவானது. அந்த சாதனையை அவலாஞ்சி நேற்று சமன் செய்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 1965ம் ஆண்டில் 70 சென்டிமீட்டர் மழையும், 2008ம் ஆண்டில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் 2008ல் 65 சென்டிமீட்டர் மழையும் பதிவானது.

Loading...

அவலாஞ்சியில் 2007ம் ஆண்டில் ஒரே நாளில் 56 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது.

சென்னையில் 2015ல் வெள்ளம் ஏற்பட்டபோது காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் ஒரே நாளில் 47.5 சென்டிமீட்டர் பதிவானது குறிப்பிடத்தக்கது.
First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...