Home /News /tamil-nadu /

நிவர் புயலின் போதும் கைவரிசை காட்டிய ஆட்டோ திருடர்கள் கைது..

நிவர் புயலின் போதும் கைவரிசை காட்டிய ஆட்டோ திருடர்கள் கைது..

நிவர் புயலின் போதும் கைவரிசை காட்டிய ஆட்டோ திருடர்கள் கைது..

திருவள்ளூர் மாவட்டத்தில் நிவர் புயல் நேரத்தில் சாலையில் நின்றிருந்த ஆட்டோக்களை திருடிய வழக்கில் சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை பிடித்துள்ளனர் போலீசாரிடம் ஆட்டோ திருட்டு கும்பல் சிக்கியது எப்படி?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    நிவர் புயல் தமிழகத்தையே புரட்டி போட்டுக்கொண்டிருந்த நேரத்தில், ஒரு கும்பல் சாலையில் நின்றிருந்த ஆட்டோக்களை குறிவைத்து திருடியுள்ளது திருடிய ஆட்டோக்களை அடகுவைத்த கும்பல் சிக்கியது எப்படி?

    ஆவடி, பட்டாபிராம், சாலையில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவது வழக்கம். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள சாலையில் நிவர் புயல் மழை நேரத்தில் யாரும் இல்லாமல் விரிச்சோடி இருந்துள்ளது. அந்த நேரத்தை தங்களுக்கு சாதகமாக்கி கொண்ட கும்பல் ஒன்று, இரவு நேரத்தில் ஆட்டோக்களை கள்ள சாவிகளை கொண்டு திருடி சென்றுள்ளது. தினம் ஒரு ஆட்டோ என்று தொடர்ந்து ஒரே பகுதியில் மூன்றிற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் திருடு போனதாக போலீசாருக்கு புகார் வந்துள்ளது.

    புகாரை பெற்ற போலீசார் அந்த பக்தியில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணையை தொடங்கினர். மழை நேரம் என்பதால் சிசிடிவியில் காட்சிகள் தெளிவாக பதிவாகாமல் இருந்தது. மேலும் தனிப்படை அமைத்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர். விசாரணையில் தண்டையார் பேட்டை பகுதியை சேர்ந்த சிலரை போலீசார் சந்தேகப்பட்டனர்.

    அந்த கும்பல்தான் ஆவடி பட்டாபிராம் பகுதியில் ஆட்டோ திருடி கைவரிசை காட்டியது என்று உறுதி செய்யப்பட்டது. திருட்டில் தொடர்புடைய தண்டையார் பேட்டை சேர்ந்த 18 வயது புஷ்பராஜ், எர்ணாவூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த 21 வயது பெருமாள் , கொடுங்கையூரை சேர்ந்த 26 வயது பிரதீப் குமார், கொருக்குப்பேட்டையை சேர்ந்த24 வயதான நரசிம்மா ஆகியோரை போலீசார் சுற்றிவளைத்து கைது செயதனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் பெருமாள், நரசிம்மா ஆகிய இருவரும் ஆட்டோ டிரைவர்களாக உள்ளனர். நண்பர்கள் இணைந்து ஆட்டோக்களை திருடி, வழக்கறிஞர் பிரதீப் என்பவருடம் ரூ 15 ஆயிரம்யிரத்திற்கு அடகு வைத்ததும் தெரியவந்துள்ளது.

    தயாநிதி மாறன் வாகனத்தின் மீது பாமக-வினர் கல்வீசி தாக்கியதால் பரபரப்பு... (வீடியோ)

    திருட்டு ஆட்டோக்களின் பதிவு எண்களை மாற்றி நாள் வாடகைக்கு விட்டுள்ளார் வழக்கறிஞர் பிரதீப். 4 ஆட்டோக்களையும் பறிமுதல் செய்து ஆவடி தனிப்படை போலீசார் 4 குற்றவாளிகளையும்  சிறையில் அடைத்தனர்.

     

    சாலையில் நின்றிருந்த ஆட்டோக்களை திருடிய கும்பல் வேரெங்கும் கைவரிசை காட்டியுள்ளதா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Auto, Crime | குற்றச் செய்திகள், Theft, Thiruvallur

    அடுத்த செய்தி