வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் ஆட்டோ எல்பிஜி கியாஸ் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளதால் வாடகை வாகன ஓட்டுனர்கள் கவலையடைந்துள்ளனர். ஷேர் ஆட்டோக்களின் கட்டணமும் உயரக்கூடும் என பயணிகள் இடையே அச்சம் எழுந்துள்ளது.
பெட்ரோலிய எரிபொருளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த எல்பிஜி கியாஸ்-ஐ பயன்படுத்தி இயங்கும் வாகனங்கள் பயன்பாடு கணிசமாக அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பலரும் எல்பிஜி காஸ் வாகனங்களுக்கு மாறத் தொடங்கினர். தற்போது தமிழகத்தில் பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் கேஸ் விலையோடு போட்டி போட்டுக்கொண்டு AUTO LPG கேஸ் விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய விலை அமலுக்கு வந்துள்ளது.
கடந்த அக்டோபர் 1ம் தேதி ஒரு லிட்டர் ஆட்டோ எல்பிஐ காஸ் 57.18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. .தற்பொழுது அவற்றின் விலை மாற்றி அமைக்கப்பட்டு revised RSP w.e.f. 01.11.2021 நிலவரப்படி இன்று; மேல்மருவத்தூரில்- ரூ.65.85, சென்னையில்- ரூ.64.94, வேலூரில் - ரூ.66.19, மதுரை மற்றும் திண்டுக்கல்லில்-ரூ. 64.15, தூத்துக்குடியில்-ரூ. 65.32, திருச்சியில் - ரூ.64.15, தஞ்சாவூரில் - ரூ.64.65, உளுந்தூர்பேட்டையில் - ரூ.66.81, சிதம்பரத்தில்- ரூ.66.92
நாகர்கோயில்- ரூ.66.39, பாண்டிச்சேரியில் - 66.6 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு லிட்டருக்கு 8 ரூபாய் வரை உயர்ந்து இன்று முதல் புதிய விலை அமலுக்கு வந்துள்ளது. இதனால் பயணிகள் ஷேர் ஆட்டோ கட்டணமும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெட்ரோல் விலை தமிழகத்தில் ரூ.107ஐ கடந்தது: டீசல் விலையும் அதிகரிப்பு!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.