• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆட்டோக்கள் இயக்குவதற்கும் அனுமதியளிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

ஆட்டோக்கள் இயக்குவதற்கும் அனுமதியளிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

டிடிவி. தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.

டிடிவி. தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.

அரசிடமிருந்து சிறப்பு உதவிகள் எதுவும் கிடைக்காமல் பொது முடக்கத்தால் கடுமையாக ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

  • Share this:
    ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், ஆட்டோக்கள் இயக்குவதற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

    அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, "கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்குவதற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

    அரசிடமிருந்து சிறப்பு உதவிகள் எதுவும் கிடைக்காமல் பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுனர்கள் இதன் மூலம் ஓரளவுக்கு நிம்மதி பெருமூச்சு விட முடியும். எனவே, தமிழக அரசு உடனடியாக இதனைப் பரிசீலித்து அறிவிக்கவேண்டும்."

    இவ்வாறு தெரிவித்தார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: