’கடன் நெருக்கடி... ஊரடங்கால் வருமானம் இல்லை...’ ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை

புதுக்கோட்டையில் பொது முடக்கம் ஏற்படுத்திய பாதிப்பால் மன உளைச்சலில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

’கடன் நெருக்கடி... ஊரடங்கால் வருமானம் இல்லை...’ ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை
கோப்புப்படம்.
  • Share this:
சுப்ரமணி என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் அங்கு போதிய வருமானம் கிடைக்காததால் கடந்த ஓராண்டுக்கு முன் தாயகம் திரும்பி லோன் மூலம் ஆட்டோ வாங்கி புதுக்கோட்டையில் ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் கொரொனா அச்சுறுத்தலால் பொதுமுடக்கம் அறிவிக்கப்படவே வருமானம் இழந்து குடும்பத்தை காக்க முடியாமல் தவித்து வந்துள்ளார். பிள்ளைகளின் படிப்பிற்கு கடன் கொடுத்தவர்களும் நெருக்கியதாக கூறப்படுகிறது.Also read... பெற்ற மகளை கொன்று புதைத்து நாடகம் ஆடிய தாய் - 6 ஆண்டுகளுக்கு பின் அம்பலமான உண்மை

இந்நிலையில் தனது ஆட்டோ உள்ள ஆட்டோ ஸ்டேண்ட் அருகிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அப்பகுதி ஆட்டோ ஓட்டுனர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


First published: June 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading