• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • யார் கெத்து என்பதில் தகராறு? சென்னையில் ஆட்டோ ஓட்டுநரை நடுரோட்டில் வெட்டிக் கொன்ற 5 பேர்

யார் கெத்து என்பதில் தகராறு? சென்னையில் ஆட்டோ ஓட்டுநரை நடுரோட்டில் வெட்டிக் கொன்ற 5 பேர்

கொலை செய்தவர்கள்

கொலை செய்தவர்கள்

சென்னை மைலாப்பூரில் யார் பெரியவர் என்ற தகராறில் ஆட்டோ ஓட்டுநரை ஐந்து பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் வைத்து வெட்டிக் கொலை செய்துள்ளது.

  • Share this:
சென்னை மைலாப்பூர் முத்துகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநரான மணிகண்டன்(எ) பொட்டை மணி (27). இவர் வழக்கம் போல பணிக்கு சென்றுவிட்டு நேற்று இரவு 10 மணியளவில் மைலாப்பூர் முண்டககன்னியம்மன் கோவில் தெரு வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 5 நபர்கள் மணிகண்டனை வழிமறித்து கத்தியால் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.
வழக்கு பதிவு செய்த மைலாப்பூர் போலீசார் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் குற்றவாளியை தேடிவந்தனர். இந்த நிலையில் அதே பகுதியை ஸ்ரீதர் (30),  கார்த்திக் (25), ஆனந்தபாபு(27), சிவகுமார்(30), பரத்வாஜ்(22) ஆகியோர் மணிகண்டனை தாங்கள் தான் கொலை செய்ததாக பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 4 மாதத்திற்கு முன்பு மைலாப்பூர் கபாலி தோட்டத்தில் 17 வயது சிறுவனான வசந்த் என்பவரை கொலை செய்து A2 குற்றவாளியாக மணிகண்டன் சிறை சென்று ஒரு மாதத்திற்கு முன்பு தான் பிணையில் வெளியே வந்ததுள்ளார்.

கொலை செய்யப்பட்டவர்


சிறையில் இருந்து வெளியே வந்த மணிகண்டன் இனி ஏரியாவில் தான் பெரிய ஆள் என மற்ற நண்பர்களிடம் சொல்லிவந்ததாகவும், தான் ஜெயிலுக்கு போயிட்டு வந்ததால் இனி ஏரியாவில் உள்ள இளைஞர்கள், தான் சொல்வது போலதான் நடக்க வேண்டும் என சொல்லி வந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனால் ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்தபாபு என்பவருக்கும், யார் கேங்க் பெரியது என்ற பகை  இருந்து வந்துள்ளது. மேலும், ஒரு வாரத்திற்கு முன்பு தனது நண்பரான விஜய் என்பவரை அழைத்துக்கொண்டு சிவா (எ) சிவகுமாரிடம் இனி ஆனந்தபாபுவுடன் சேர்ந்து ஏரியாவில் சீன் போடக்கூடாது எனவும் மீறினால் கொலை செய்துவிடுவதாகவும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

இதுபற்றி சிவா (எ) சிவகுமார் தனது நண்பரான ஆனந்தபாபுவிடம் கூறியுள்ளார். இதனால் ஏரியாவில் ஆனந்தபாபு கேங்குக்கும், மணிகண்டன் கேங்குக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை பெரிதாகியுள்ளது. இதனால் ஆனந்தபாபு தனது நண்பர்களான சிவா(எ) சிவகுமார், கார்த்திக், ஸ்ரீதர், பரத்வாஜ் ஆகியோருடன் இணைந்து மணிகண்டனை கொல்ல சதிதிட்டம் தீட்டியுள்ளார்.


திட்டமிட்டபடியே 23-ம் தேதி மாலை முதலே மணிகண்டனை இவர்கள் பின்தொடர்ந்து மணிகண்டனின் நடவடிக்கைகளை அறிந்துள்ளனர். இந்த நிலையில் மண்கண்டன் இருசக்கர வாகனத்தில் தனியாக வந்த போது ஆட்டோவில் வந்த ஆனந்தபாபு மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் கத்தியால் மணிகண்டனை தலையில் வெட்டி கொலை செய்துள்ளனர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த கொலை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ஆனந்தபாபு மீது திருட்டு, அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
பின்னர் 5 நபர்களையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: