விதிமுறைகளை மீறிய கட்டடத்துக்கு சீல்: சட்ட விரோதமாக சீலை உடைத்த கடை ஊழியர்கள்

news18
Updated: August 10, 2018, 3:13 PM IST
விதிமுறைகளை மீறிய கட்டடத்துக்கு சீல்: சட்ட விரோதமாக சீலை உடைத்த  கடை ஊழியர்கள்
கடை ஊழியர்கள் சீலை உடைத்ததால் பரபரப்பு
news18
Updated: August 10, 2018, 3:13 PM IST
கடலூரில் விதிமுறைகளை மீறிய கட்டடத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அப்போது சட்டவிரோதமாக சீலை உடைத்த கடை ஊழியர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் சிதம்பரம் சாலையில் கே.வி டெக்ஸ் ஜவுளிக் கடை இயங்கி வருகிறது. ஜவுளிக் கடையின் கட்டிடம் சட்ட விரோதமாக 3வது மற்றும் 4வது மாடி அனுமதி இல்லாமல் கட்டியுள்ளனர். அனுமதி பெறாமல் 2 மாடி தாண்டி 3, மற்றும் 4வது மாடி கட்டிடத்தை கட்டியதற்கு நகர் ஊரமைப்பு துறை சார்பில் (உள்ளூர் திட்ட குழும்ம்) சார்பிலும் ஏற்கனவே கடைக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

நோட்டீஸுக்கு எந்தவித மதிப்பும் அளிக்காததால் இன்று காலை நகர் ஊரமைப்பு துறை அதிகாரிகள் கேவி டெக்ஸ் ஜவுளிக்கடைக்கு சீல் வைத்தனர்.

அப்போது கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி அவர்கள் வைத்த சிலைகள் உடைத்து கடையின் உள்ளே சென்றனர். இதனால் அதிகாரிகளுக்கும் கடையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
First published: August 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...