ஜெயலலிதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் பணிகளுக்கான ஆய்வை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

ஜெயலலிதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
வேதா நிலையம்
  • News18
  • Last Updated: September 29, 2020, 4:54 PM IST
  • Share this:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ்கார்டனில் உள்ள ‘வேதா’ இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றுவதற்கு ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதற்கான நடவடிக்கைகளிலும் அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கிற்கான தீர்ப்பு அண்மையில் வெளியானது. அதில் வீட்டை நினைவிடமாக மாற்ற எந்தத் தடையும் இல்லை என உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசின் சார்பில் நினைவிடமாக மாற்றும் பணிகள் துவங்கியுள்ளன.Also read... MBBS நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் - ராமதாஸ்


இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு அண்மையில் சட்டம் இயற்றியது. இதன் தொடர்ச்சியாக செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலாளர் சங்கர் மற்றும் தென் சென்னை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டனர்.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading