அமித்ஷா உடன் நள்ளிரவு வரை ஆலோசனை நடத்திய ஆடிட்டர் குருமூர்த்தி

நட்சத்திர விடுதியில் பாஜக மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள் , உயர்மட்ட குழு  உறுப்பினர்கள் , மாவட்ட தலைவர்கள் என பல நிர்வாகிகளுடன் தொடர்ந்து விடிய விடிய ஆலோசனை மேற்கொண்டார்.

  • Share this:
பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினார்.

இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வருகை தந்த நிலையில் நேற்று மாலை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியைத் தொடர்ந்து சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கினார். தொடர்ந்து இந்த நட்சத்திர விடுதியில் பாஜக மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள் , உயர்மட்ட குழு  உறுப்பினர்கள் , மாவட்ட தலைவர்கள் என பல நிர்வாகிகளுடன் தொடர்ந்து விடிய விடிய ஆலோசனை மேற்கொண்டார்.

முன்னதாக தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் விடுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கூட்டணி தொடர்பாகவும் தமிழக அரசின் சில திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மேலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில்  பாஜகவிற்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள் பட்டியலிடப்பட்டு தொகுதி பங்கீடு குறித்து முதற்கட்டமாக பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் ஆடிட்டர் குருமூர்த்தி இரவு 10.50 மணிக்கு அமித்ஷா தங்கி இருக்கும் ஒட்டலுக்கு வருகை தந்தார்.  துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியுடன் நள்ளிரவு 2.30 மணி வரை தனியே ஆலோசித்த அமித்ஷா  தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் குறித்தும்  பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
Published by:Vijay R
First published: