ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் புயலை கிளப்பியுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி குறித்து அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்ட அதிமுக நிர்வாகி நாஞ்சில் கோலப்பன் என்பவருடன் பொன்னையன் பேசியதாக ஆடியோ ஒன்றை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நேற்று வெளியிட்டார்.
அந்த ஆடியோவில், “ எடப்பாடி பழனிசாமி சரியாகதான் இருந்தார் ஆனால் அவரை சுற்றி இருக்கிற எம்.எல்.ஏக்கள் அப்படி இல்லை. எல்லா மாவட்ட செயலாளர்களையும் எம்.எல்.ஏவையும் இந்த 4 வருஷம் கொள்ளையடிக்க விட்டார் பாருங்க இப்ப அவரு முதுகுலயே குத்திட்டாங்க. எடப்பாடி பழனிசாமி அவங்க சொல்லுறதுக்கு எல்லாம் தலையாட்டுறாரு. சி.வி.சண்முகம் என் பையன விட 4 வயது இளையவர். அவங்க அப்பாவும் நானும் க்ளாஸ் மேட்.
எடப்பாடி கையில் 9 எம்.எல்.ஏ தான் இருக்காங்க. மற்ற எம்.எல்.ஏ எல்லாம் வேலுமணி, தங்கமணி. சி.வி.சண்முகம் கையில இருக்காங்க. எடப்பாடிக்கு வேறு வழியில்லை. கே.பி.முனுசாமி கூட ஒற்றைத் தலைமைக்கு வரலாம். எம்.எல்.ஏ ஆதரவு வைத்துதான் எதிர்காலம். கொள்கையை விட்டுவிட்டு பதவியை காப்பாற்றினால் போதும் என எடப்பாடி ஓடுகிறார்”என அந்த ஆடியோ நீள்கிறது.
இந்த ஆடியோ விவகாரம் அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இதுதன்னுடைய குரலே இல்லை என பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார். நியூஸ் 18 தமிழ்நாடு-க்கு அளித்த நேர்காணலில், “ இந்த ஆடியோவை ரிலீஸ் செய்தவர்களைதான் கேட்கவேண்டும். நான் அப்படி பேசவில்லை. உயர்தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி மிமிக்ரி செய்துள்ளார்கள். பொய்யான செய்தியை மிக மிக மரியாதை குறைவாக அவன், இவன் என்ற கொச்சை வார்த்தைகளை பேசி பொய்யான ஆடியோவை வெளியிட்டுள்ளார்கள்.
இது பொன்னையன் குரல் தான் என நீருபிக்கும் காலம் வரட்டும் அப்போது நீங்களே பார்ப்பீர்கள். நான் 100 சதவீதம் உறுதியாக உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
Also Read: 'ஆடியோ பொன்னையன் உடையது தான்’ - சர்ச்சை ஆடியோ குறித்து கன்னியாகுமரி நிர்வாகி கோலப்பன் விளக்கம்
இந்த ஆடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கன்னியாகுமரி நிர்வாகி நாஞ்சில் கோலப்பன் நியூஸ்18 தமிழ்நாடு-க்கு அளித்த நேர்க்காணலில், என்னுடன் பேசி வெளியான ஆடியோவில் இருப்பது பொன்னையன் குரல் தான். கடந்த 9-ம் தேதி பொன்னையனுடன் நான் பேசினேன். ஆடியோவில் பேசி ஒவ்வொரு வார்த்தையும் பொன்னையனுடயது தான். பொன்னையனை அவமானப்படுத்தவேண்டும் என்பதற்காக ஆடியோவை பதிவு செய்யவில்லை. ஈபிஎஸ்-ஐ 100 சதவீதம் தொண்டர்கள் ஏற்கவில்லை என பொன்னையன் கூறினார். ஆடியோ குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறவில்லை. எனத் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, ADMK member, Admk Party, Edappadi palanisamy, O Panneerselvam, OPS - EPS