என்னது Audi A6 சொகுசு கார் இல்லையா?.. கொதித்த நெட்டிசன்கள்!! கூகுளில் அதிகம் தேடப்படும் காரின் விலை..

என்னது Audi A6 சொகுசு கார் இல்லையா?.. கொதித்த நெட்டிசன்கள்!! கூகுளில் அதிகம் தேடப்பட்ட காரின் விலை..

என் கணவர் தடைதடை செய்யப்பட்ட சீனா பப்ஜி விளையாட வில்லை. கொரியன் வெர்ஷ்ன் தான் விளையாண்டார் என கிருத்திகா கூறியுள்ளார்.

  • Share this:
எங்களிடம் சொகுசு கார்கள் இல்லை Audi A6 என்ற கார் மட்டுமே உள்ளது என பப்ஜி மதன் மனைவி கிருத்திகா தெரிவித்ததையடுத்து அவர் மீது பல்வேறு விமர்சனங்களை நெட்டிசன்கள் முன்வைத்து வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக் கொண்டே விளையாடி, அதனை யூடியூபிலும் வீடியோவாக வெளியிட்டதாக மதன் மீது சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் அடுக்கடுக்காக புகார்கள் அளிக்கப்பட்டன. இதனையடுத்து மதன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருத்திகாவை கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில், கிருத்திகா ஜாமினில் வெளிவந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், என் கணவர் தடைதடை செய்யப்பட்ட சீனா பப்ஜி விளையாட வில்லை. கொரியன் வெர்ஷ்ன் தான் விளையாண்டார். 3 வருஷமாக என் கணவர் பப்ஜி விளையாண்டு வருகிறார். ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைக்கிறார். 4 மணி நேரம் மட்டும் தான் தூங்குவார்.

எங்களுக்கு சொந்தமாக பங்களாவும் இல்லை, சொகுசு காரும் இல்லை. எங்களிடம் Audi A6 கார் ஒன்று மட்டுமே உள்ளது என்று அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தார்.

எந்த சொகுசு காரும் இல்லை என்று தெரிவித்துவிட்டு, ஆடி போன்ற 65 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை சுட்டிக்காட்டி கிருத்திகா சொகுசு கார் இல்லை என்று கூறியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

Also read: ஒரு நாளைக்கு 20 மணிநேரம் பப்ஜி; 4 மணி நேரம் தூக்கம்- யூ டியூப் முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு: பப்ஜி மதன் மனைவி பேட்டி!

ஏற்கனவே பப்ஜி மதன் ஆபாசமாக பேசி வரக்கூடிய நிலையில், அவரது மனைவி இதுபோன்ற குழப்பமாக பேசிவருவது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

இதனிடேயே, அவர் தங்களுக்கு சொந்தமாக உள்ளதாக கூறிய Audi A6 காரின் விலை எவ்வளவு என்று நெட்டிசன்கள் பலரும் கூகுளில் தேடி வருகின்றனர். இதனால் கூகுளில் கார் என தேடினாலேAudi A6 என்ற காரின் விலைப்பட்டியல் வருகிறது.

அதில் அந்த மாடல் காரின் விலை 65 லட்சத்தில் இருந்து 75 லட்சம் வரை விலை மதிப்பை காண்பிக்கிறது. காரின் விலையை அறிந்த நெட்டிசன்கள், என்னது இந்த கார் சொகுசு கார் இல்லையா? என கடும் கொதிப்படைந்துள்ளனர்.
Published by:Esakki Raja
First published: