Home /News /tamil-nadu /

திருச்சி : மாவட்ட மைய நூலகத்தில் திறனறித் தேர்வு பயிற்சி –மாணவர்கள் பயனடைய வேண்டுகோள்

திருச்சி : மாவட்ட மைய நூலகத்தில் திறனறித் தேர்வு பயிற்சி –மாணவர்கள் பயனடைய வேண்டுகோள்

திருச்சி மாவட்ட மைய நூலகம் சார்பில் தேசிய வருவாய் மற்றும் திறனறித் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன.

  • 1 minute read
  • Last Updated :
திருச்சி மாவட்ட மைய நூலகம் சார்பில் தேசிய வருவாய் மற்றும் திறனறித் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. இத்துவக்க விழா நிகழ்ச்சி வருகிற 2022 ஜனவரி 2 ஆம் தேதி காலை 10 மணியளவில் திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது.

இதில், அரசு பள்ளி மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம். மேலும் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் 1,50,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேசிய வருவாய் மற்றும் திறனறித் தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு மாதாந்தோறும் ரூபாய். 1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு, அதாவது 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 48,000 ரூபாய் அரசு கல்வித்தொகை வழங்கப்படும்.

ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் இப்பயிற்சி தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய,பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சிவக்குமாரை 63836 90730 என்ற செல் நம்பரில் தொடர்புக்கொள்ளலாம்.

செய்தியாளர்-ஜெ.கென்னடி- திருச்சி
First published:

அடுத்த செய்தி