ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் - சட்டப்பேரவையில் விளக்கம்

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் - சட்டப்பேரவையில் விளக்கம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழ்நாடு அரசு மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நீட் தேர்வை புறந்தள்ளுவதற்கு புதிய சட்டம் இயற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் மருத்துவ படிப்புக்கான இடங்கள் ஏழை மாணவனுக்கு கிடைப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு முதலமைச்சர் கடந்த ஜூன் மாதம் ஐந்தாம் தேதி ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார் .

அந்த குழுவானது கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தாகவும், உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து அதனை செயல்படுத்தும் பொருட்டு தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இக்குழு மருத்துவக் கல்வி சேர்க்கையில் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வினை புறந்தள்ளுவதற்கு புதிய சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற முயற்சிக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read : தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை அலர்ட்... எந்த மாவட்டங்களுக்கு?

மருத்துவக்கல்வி செயற்கை முறைகளில் பாகுபாடு காட்டப்படுவதால் ஒதுக்கப்படும் மற்றும் பாதிக்கப்படும் மாணவ சமுதாயத்திற்கான சமூகநீதியை பாதுகாப்பை உறுதி செய்யும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vijay R
First published:

Tags: Neet Exam, TN Assembly