Home /News /tamil-nadu /

பணிச்சுமை காரணமாக ஓமன் நாட்டில் தற்கொலைக்கு முயன்றவரை மீட்டு தமிழகம் அழைத்து வருகை!

பணிச்சுமை காரணமாக ஓமன் நாட்டில் தற்கொலைக்கு முயன்றவரை மீட்டு தமிழகம் அழைத்து வருகை!

பணிச்சுமை காரணமாக ஓமன் நாட்டில் தற்கொலைக்கு முயன்றவரை மீட்டு தமிழகம் அழைத்து வருகை!

பணிச்சுமை காரணமாக ஓமன் நாட்டில் தற்கொலைக்கு முயன்றவரை மீட்டு தமிழகம் அழைத்து வருகை!

பணிசுமை காரணமாக ஓமன் நாட்டில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றவர் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழகம் அழைத்துவரப்பட்டர்.

    திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ்பாபு (வயது-26) இவர் ஓமன் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 7 மாதங்களாக வேலை செய்து வந்துள்ளார். அங்கு அவர் வேலை செய்து வந்த நிறுவனத்தின் உரிமையாளர் அதிக பணிச்சுமை கொடுத்தும், ஊதியம் தராமல் துன்புறுத்தியதால் அவர் தங்கி இருந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதில் படுகாயமடைந்த தினேஷ்பாபு ஓமன் நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
    அவரை தாயகம் அழைத்து வர வேண்டும் என்று அவர் குடும்பத்தினர் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் தமிழக அரசு சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் வெளிநாடு வாழ் தமிழர்கள் ஆணையம் ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் உதவியுடன் அவரை மீட்டு இன்று சென்னை அழைத்து வந்தனர்.

    மேலும் தினேஷ் பாபுவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு 108 அவசர ஊர்தி மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    ஓமனில் இருந்து அவரை தமிழகம் தமிழகம் அழைத்து வந்ததற்க்கு அவரின் குடும்பத்தினர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Esakki Raja
    First published:

    Tags: News On Instagram, Suicide

    அடுத்த செய்தி