• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • துரைமுருகன் வீட்டில் கொள்ளை முயற்சி.. 100 ரூபாய் இல்லையா? விரக்தியில் கொள்ளையர்கள்..

துரைமுருகன் வீட்டில் கொள்ளை முயற்சி.. 100 ரூபாய் இல்லையா? விரக்தியில் கொள்ளையர்கள்..

Youtube Video

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த நிலையில், அவரது பக்கத்து வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பணம் கிடைக்காத ஆத்திரத்தில், 100 ரூபாய் கூட வைக்க முடியாதா என சுவரில் எழுதிச் சென்றுள்ள சம்பவம் தெரியவந்துள்ளது. ஏலகிரி மலையில் நடந்தது என்ன?

  • Share this:
    திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் பண்ணை வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி தொடர்பான பரபரப்பு தணிவதற்குள் அவரது பக்கத்து வீட்டில் கொள்ளையர்கள், 100 ரூபாய் கூட வைக்க முடியாதா என எழுதிச் சென்றுள்ள சம்பவம் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பக்கத்து வீட்டுக் கொள்ளை முயற்சி அம்பலமானது எப்படி?

    திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் மஞ்சக் கொல்லை என்ற இடத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு, 25 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது. பிரேம் குமார், அவரது மனைவி சங்கீதா ஆகியோர் இந்தப் பண்ணை வீட்டை பராமரித்து வருகின்றனர். இவர்கள் அந்தப் பண்ணை வீட்டு வளாகத்தில் உள்ள தனி வீட்டில் வசித்து வருகின்றனர்

    கடந்த 11ம் தேதி நள்ளிரவு பண்ணை வீட்டிற்குள் புகுந்த நபர்கள், பணம், நகைகள் எதுவும் கிடைக்காததால், சிசிடிவியின் ஹார்ட் டிஸ்க்கை மட்டும் திருடித் தப்பி விட்டனர். இதையடுத்து டிஐஜி காமினி தலைமையில் எஸ்.பி விஜயகுமார் மற்றும் போலீசார் துரைமுருகன் வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.

    பக்கத்து வீடுகளில் சிசிடிவிக்கள் உள்ளனவா என சோதித்தபோது அருகில் வாணியம்பாடியைச் சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சிசிடிவி பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

    மேலும் படிக்க... கோவையில் கொரோனாவால் முடங்கிய சுற்றுலா வாடகை கார் தொழில்.. வேலையின்றி தவிக்கும் ஓட்டுநர்கள்...

    அதையடுத்து போலீசார் அங்கு ஆய்வு செய்யச் சென்றபோது வீட்டை பராமரித்து வரும் தம்பதி, தரைத் தளத்தில் இருந்தனர். முதல் தளத்தில் போலீசார் சோதனையி்ட்டபோது அங்கும் கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது

    அந்த வீட்டிலும் நகை, பணம் சிக்காததால், ஆத்திரத்தில் அங்கிருந்த டிவியை கொள்ளையர்கள் உடைத்துள்ளனர். மேலும் அங்கு கிடந்த லிப்ஸ்டிக்கை எடுத்து சுவரில், "ஒரு நூறு ரூபாய் வெக்க மாட்ட" என எழுதியுள்ளனர். அங்கு கிடந்த நோட்டு புத்தகத்தில் "ஒரு ரூபாய்கூட இல்ல.. எடுக்கல" எனவும் எழுதி வைத்திருந்தனர். செந்தில்குமார் தரப்பில் புகார் அளிக்கப்படாத நிலையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

    நகை, பணம் கிடைக்காத ஆத்திரத்தில் 100 ரூபாய் கூட வைக்க முடியாதா என கொள்ளையர்கள் சுவரில் லிப்ஸ்டிக்கால் எழுதி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: