செம்மொழி நிறுவனத்தைக் கலைக்க முயற்சி.. முதலமைச்சர் உரிய அழுத்தம் கொடுக்கவேண்டும் - மு.க. ஸ்டாலின்

செம்மொழி நிறுவனத்தைக் கலைக்க முயற்சி.. முதலமைச்சர் உரிய அழுத்தம் கொடுக்கவேண்டும் - மு.க. ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

சமஸ்கிருதத்தை சீராட்டும் மத்திய அரசு செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயாவுடன் இணைத்துச் சுருக்குவது கண்டனத்திற்குரியது என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • Share this:
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ”இந்திய மொழிகள் ஆய்வுக்கான நிறுவனத்தை, 'பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா' என பெயர் சூட்டி, அத்துடன், சென்னையில் உள்ள 'செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தை' இணைத்திட மத்திய பா.ஜ.க. அரசு முடிவு எடுத்துள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil) உருவாக்கப்பட்டது. அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகும், பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகும் இந்த நிறுவனம் அனைத்து வழிகளிலும், திட்டமிட்டு முடக்கப்பட்டது.

Also read: யார் கட்சி தொடங்கினாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது - கனிமொழி

தமிழ் மொழி மீது பாசம் காட்டுவதைப் போல் பாசாங்கு செய்து பல்கலைக்கழகத்தில் ‘துறை' என்ற அளவில் சுருக்கி, சிறுமைப்படுத்தும் உள் நோக்கத்துடன் நடந்து கொள்வது கடுமையான கண்டனத்திற்குரியது. சமஸ்கிருதத்தை மட்டும் தனிப்பட்ட முறையில், சீராட்டும் வேடத்தை தமிழ் கூறும் நல்லுலகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. தமிழகத்தின் உயிரோட்டமாக இருக்கும் மொழி உணர்வை முனை மழுங்கச் செய்திடலாம் என்று மத்திய பா.ஜ.க. அரசு கனவிலும் எண்ண வேண்டாம். இந்த பிற்போக்குத் தனமான முடிவினை கைவிட வேண்டும்.

அனைத்துப் பிரச்சினைகளிலும் அமைதி காப்பது போல், செம்மொழி நிறுவனத்தைக் கலைக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் இந்த முடிவையும் ஆமோதிக்காமல், முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.”

இவ்வாறு மு.க. ஸ்டாலின் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: