முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 20 நிமிடங்கள் மாணவன் மீது தாக்குதல்; மனிதத்தன்மையற்ற செயல்: ராமதாஸ் கண்டனம்

20 நிமிடங்கள் மாணவன் மீது தாக்குதல்; மனிதத்தன்மையற்ற செயல்: ராமதாஸ் கண்டனம்

கோவையில் சட்டையை இறுக்கமாக அணிந்ததற்காக 11ம் வகுப்பு மாணவரை தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் தாக்கி காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் சட்டையை இறுக்கமாக அணிந்ததற்காக 11ம் வகுப்பு மாணவரை தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் தாக்கி காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் சட்டையை இறுக்கமாக அணிந்ததற்காக 11ம் வகுப்பு மாணவரை தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் தாக்கி காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :

கோவை தனியார் பள்ளியில் மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல் நடத்தியது மனிதத்தன்மையற்ற செயல் என்றும், இதனை அனுமதிக்கக் கூடாது எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியரான கலாதரன். இவரது 16 வயது 2வது மகன் (மிதுன்) அதே பகுதியில் உள்ள சி.எம்.எஸ் என்ற தனியார் பள்ளியில் பயாலஜி பிரிவில் 11ம் வகுப்பு பயின்று வந்தார். கால்பந்து வீரராகவும் மிளிர்ந்து வரும் சிறுவன், கோவை மாவட்ட அணிக்கு தேர்வாகியுள்ளார். மேலும் நீட் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். பள்ளி திறந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், மாணவருக்கு தைக்கப்பட்ட சட்டை இறுக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பள்ளிக்கு சென்ற போது, அங்கு வகுப்பறைக்கு வந்த இயற்பியல் ஆசிரியர் சிவரஞ்சித் என்பவர், சட்டை ஏன் இறுக்கமாக அனிந்துள்ளாய் என மாணவரை கேட்டுள்ளார். அதற்கு மாணவர் விளக்கமளித்த போதும், சமாதானம் அடையாத ஆசிரியர் அவரை அறைந்ததோடு, அவரை குனியவைத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் மாணவருக்கு காது, கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர் அளித்த தகவலின் பேரில் பள்ளிக்கு சென்ற மாணவரின் தந்தை அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

இது தொடர்பாக கலாதரன் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணம்பட்டி போலீசார் ஆசிரியர் சிவ ரஞ்சித் மீது இந்திய தண்டனைச் சட்டம் 323 கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், கோவை தனியார் பள்ளியில் மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல் நடத்தியது மனிதத்தன்மையற்ற செயல் என்றும், இதனை அனுமதிக்கக் கூடாது எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, "கோவை கணபதி நகரில் உள்ள தனியார் பள்ளியில் இறுக்கமான ஆடை அணிந்ததற்காக 11-ம் வகுப்பு மாணவனை இயற்பியல் ஆசிரியர் 20 நிமிடங்கள் தாக்கியதில் மாணவன் கடுமையான காயங்கள் மற்றும் வலியுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆசிரியரின் செயல் கண்டிக்கத்தக்கது.

ஆசிரியர்கள் மாணவர்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டும், தவறு செய்தால் தண்டித்து நல்வழிப் படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இரு மாணவனை 20 நிமிடங்களுக்கு மேலாக ஆசிரியர் தொடர்ந்து தாக்குவது மனிதத்தன்மையற்ற செயல். இதை அனுமதிக்கக் கூடாது.

காயமடைந்த மாணவருக்கு தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். தவறு செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு கனிவுடன் நடந்து கொள்வது குறித்து உரிய பயிற்சிகளும், கலந்தாய்வுகளும் வழங்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

top videos

    Also Read : ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து துரத்தப்பட்ட நாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன்... பெயர்தான் காரணம் என குற்றச்சாட்டு

    First published:

    Tags: Ramadoss