குருமா தராத சப்பாத்தி கடைக்காரர் மீது தாக்குதல்; இடியாப்ப கடைக்காரர்கள் கைது

குருமா தராத சப்பாத்தி கடைக்காரர் மீது தாக்குதல்; இடியாப்ப கடைக்காரர்கள் கைது

பர்மா இடியாப்ப கடை

மதுரையில் குருமா தராத சப்பாத்தி கடைக்காரர் மீது தாக்குதல் நடைபெற்றது. இதுதொடர்பாக இடியாப்ப கடைக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

  • Share this:
மதுரை பிடி ராஜன் சாலையில் சப்பாத்தி கார்னர் என்ற கடை உள்ளது. அருகில் பர்மா இடியாப்ப கடையில் பணியாற்றும் சிவாவிடம், அந்தக் கடைக்குச் சாப்பிடச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர் இடியாப்பத்திற்கு குருமா கேட்டுள்ளார். பொதுவாக இடியாப்ப கடையில் தேங்காய் பால் மற்றும் சர்க்கரை மட்டுமே வழங்கப்படும். இருப்பினும் வாடிக்கையாளர் கேட்டதால் அருகில் உள்ள சப்பாத்தி கார்னர் கடைக்கு சென்ற சிவா, அவர்களிடம் குருமா தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அங்கு பணியாற்றிய ராஜ்குமார் என்பவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிவா மற்றும் இடியாப்ப கடையில் பணியாற்றும் மற்றொரு பணியாளரான சரவணன் ஆகியோர் இணைந்து ராஜகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.



மேலும் படிக்க...பூண்டு, வெங்காயம்... இரண்டையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் ஆபத்தா..?

இதைத்தொடர்ந்து ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் சிவா மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்து பிணையில் விடுவித்தனர். மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் பிரபல கடைகளின் பணியாளர்கள் குருமாவிற்காக சண்டையிட்ட சம்பவம் கைது வரை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published: