அத்திவரதரை காண வரும் பக்தர்களின் வசதிக்காக நடமாடும் ஏ.டி.எம் வசதி!

இன்று காலை சரியாக 5:25 மணிக்கு நின்ற திருக்கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

news18
Updated: August 1, 2019, 3:40 PM IST
அத்திவரதரை காண வரும் பக்தர்களின் வசதிக்காக நடமாடும் ஏ.டி.எம் வசதி!
அத்திவரதர்
news18
Updated: August 1, 2019, 3:40 PM IST
அத்தி வரதர் திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக நடமாடும் ஏ.டிஎம் வசதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.

கடந்த ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து ஜூலை 31-ம் தேதி வரை அத்தி வரதர் சயன திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.


கடந்த 31 நாட்களில் ஏறத்தாழ 48 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று காலை சரியாக 5:25 மணிக்கு நின்ற திருக்கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அமைதியாக வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்தனர்.Loading...

இந்நிலையில் அத்திவரதர் திருவிழாவுற்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்களின் வசதிக்காக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி நடமாடும் ஏ.டி.எம் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.இது தொடர்பாக ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்த நடமாடும் ஏடிஎம், பகவான் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அருகிலுள்ள ரங்கசாமி குளம் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். திருவிழாவின் போது தினசரி காலை 8 மனி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் இந்த ஏடிஎம்-ஐ பயன்படுத்திக்கொள்ள முடியும்’ என்று அறிவித்துள்ளது.

மேலும் இந்த ஏடி.எம், பக்தர்களுக்கு ரூ.100, 500, 2000 ரூபாய் தாள்களை பெற உதவும். மேலும் உடனடியாக பண பறிமாற்றம், கணக்கு இருப்பு விவரம் போன்ற கணக்கு தொடர்பான தகவல்களை அணுகவும் மினி ஸ்டேட்மெண்ட் பெறவும் உதவும் என்றும் தெரிவித்துள்ளது.Also watch

First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...