• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தானும் சாதித்து சாதனையாளர்களையும் உருவாக்கி வரும் ஒரு ரியல் ஹீரோ திருச்சி மணிகண்டன் ஆறுமுகம்...

தானும் சாதித்து சாதனையாளர்களையும் உருவாக்கி வரும் ஒரு ரியல் ஹீரோ திருச்சி மணிகண்டன் ஆறுமுகம்...

மணிகண்டன் ஆறுமுகம்

மணிகண்டன் ஆறுமுகம்

தடகளப் போட்டிகளில் தானும் பங்கேற்று சாதித்துக் கொண்டே... பிறருக்கும் பயிற்சி அளித்து சாதனையாளர்களை உருவாக்கி வருகிறார்  திருச்சியைச் சேர்ந்த சர்வதேச தடகள வீரரான மணிகண்டன் ஆறுமுகம். 

  • Share this:
திருச்சி மாவட்டம் குண்டூர் அருகே அயன்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் ஆறுமுகம். தாய்லாந்தில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் தடகளத்தில் இந்திய அணியில் பங்கேற்று, நாட்டிற்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்தவர். தொடர்ந்து 2009ம் ஆண்டு முதல் தேசிய அளவில் தடகளப் போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர் பிரிவுகளில்  பல பதக்கங்களைப் பெற்று வருகிறார். விளையாட்டுப்பிரிவு  ஒதுக்கீட்டில் தென்னக ரயில்வே பணியில் உள்ளார்.

இந்திய அணியில் இடம் பெற்ற போது, தனக்கு கிடைத்த உலகத்தரமான பயிற்சி, நம் ஊரு இளைஞர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ராக்போர்ட் ஸ்டார் அகாடமியில் இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். பயிற்சி அளிக்கிறார் என்பதை விட மோட்டிவேட் செய்கிறார். இவர் பேசினால், வலி, சோர்வெல்லாம் பறந்து எழுந்து ஓடத் துவங்கிடுவோம் என்கிறார்கள் இவரிடம் பயிற்சி பெற்று வரும் பள்ளி மாணவிகள்.

ரியல் ஹீரோ திருச்சி மணிகண்டன் ஆறுமுகம்


மேலும் மணிகண்டன் ஆறுமுகத்திடம் பயிற்சி பெற்றவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் பி.டி.உஷாவின் சாதனையை அண்மையில்  முறியடித்து, நடப்பு சர்வதேச வீராங்கனைகளான டூட்டி சந்த், ஹீமாதாஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளிய தேசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற,  தமிழ்நாட்டின் தங்கமங்கை தனலட்சுமி,  அதே தேசிய தடகளப் போட்டியில் தங்க, வெள்ளிப் பதக்கங்களை பெற்ற இலக்கியதாசன், விக்னேஷ், கதிரவன், அரி, கவின் என சாதனையாளர்கள் பட்டியல் பெரிது. இவர்கள் மட்டுமின்றி இவரிடம் பயிற்சி பெற்று, ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என தடகளத்தில்  சாதனை படைத்து,  விளையாட்டு ஒதுக்கீட்டில் ராணுவம்,  ரயில்வே, காவல்துறை என 20க்கும் மேற்பட்டோர் பணியில் சேர்ந்துள்ளனர்.

கிராமத்தில் பொருளாதார பலம் இல்லாத குடும்பத்தில் இருந்து தடகளப் போட்டிகளில் பங்கெடுப்பதும் அதற்கு பயிற்சி பெறுவதும் எளிதானதல்ல. ஆரம்பத்தில் மிகுந்த பயிற்சி பெறுவதே எனக்கு ரொம்ப சிரமமாக இருந்தது. ஆகையால், என்னைப் போல யாரும் சிரமப்படக் கூடாதுன்னு நன்கொடையாளர்கள் உதவியுடன் பயிற்சி அளித்து வருகிறேன். எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் இதைத் தொடர்வேன். பயிற்சி பெறுவோர் பெறும் வெற்றியே எனக்கு ஊக்கமாக இருக்கிறது  என்கிறார் மணிகண்டன் ஆறுமுகம்.

திருச்சி மாவட்டத்தினர் மட்டுமல்ல சென்னை, விருதுநகர், கரூர், தஞ்சாவூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள்  50க்கும் மேற்பட்டோர் மணிகண்டன் ஆறுமுகத்திடம் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர். நிச்சயம் நாங்களும் சாதிப்போம் எங்க கோச் போல பலருக்கு உதவுவோம் என்கிறார்கள் நம்பிக்கை, உற்சாகத்தோடு.

மேலும் படிக்க...  வங்கக்கடலில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் தொடக்கம்

தடகளத்தில் தனக்கு வந்த தடைகள், சிரமங்கள் மற்றவர்களுக்கு வரக்கூடாது என்று தான் பெற்ற பயிற்சியை மற்றவர்களுக்கு அளித்து வரும் மணிகண்டன் ஆறுமுகத்தின் முயற்சிகள் பாராட்டத்தக்கது மட்டுமல்ல. சாதனை வீரர்கள் பலரும் பின்பற்ற வேண்டியது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: