அத்திவரதர் தரிசனம்: போலி விஐபி பாஸ் விற்ற 11 பேர் கைது

அத்திவரதர் தரிசனம்: போலி விஐபி பாஸ் விற்ற 11 பேர் கைது
  • Share this:
அத்தி வரதர் வைபவத்தில் போலி விஐபி பாஸ் விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் .

பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக விபி, விவிஐபி சிறப்பு தரிசன பாஸ்கள் வழங்கப்பட்டன. அந்த பாஸ்களை, ஸ்கேன் செய்தபோது அதில் பல பாஸ்கள் போலியாக அச்சடிக்கப்பட்டது தெரியவந்தது.


போலியாக அச்சடித்து விற்ற நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சிவகாஞ்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட தனசேகர், திலால், மற்றொரு திலால் உள்ளிட்ட் 4 நபர்கள் மற்றும் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட செந்தில், ரமேஷ், அப்துல், காதர், பாலு, நவுசத், அசோக் மற்றும் களிவரதன் உள்ளிட்ட 7 நபர்கள் என மொத்தம் 11 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

First published: August 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading