EXCLUSIVE | அத்திவரதர் வைபவத்தில் விஜபி, விவிஐபி டிக்கெட் விற்பனை வருவாயில் முறைகேடு

EXCLUSIVE | அத்திவரதர் வைபவத்தில் விஜபி, விவிஐபி டிக்கெட் விற்பனை வருவாயில் முறைகேடு

அத்திவரதர் தரிசன டிக்கெட் விற்பனையில் முறைகேடு?

ஒரு விஜபி டிக்கெட் 300 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டிருந்தாலும், மொத்தமாக 45 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், விஜபி டிக்கெட் விற்பனையில் 4 கோடி ரூபாய் மட்டுமே கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. 

  • Share this:
அத்திவரதர் வைபவத்தில் விஜபி, விவிஐபி டிக்கெட் விற்பனை வருவாயில் முறைகேடு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

2019ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நடைபெற்றது. இதில் பல்வேறு வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து கோடிக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் மாவட்ட நிர்வாகம் கொடுத்த தகவலும், கோவில் நிர்வாகம் கொடுத்த தகவலும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பது பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கலாமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவில் நிர்வாகம் சார்பில் 14 இடங்களில் டிக்கெட் விற்பனை நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் விற்பனை தொகை நிலவரங்களை கொடுக்க மறுத்துள்ளனர்.  அதேநேரம், மாவட்ட நிர்வாகம் சார்பில் டிக்கெட் அச்சடிக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.  இதன் மூலம் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் தொகை பெரும்பாலும் அரசுக்கு வரவில்லையோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் விஜபிக்கள் 12 லட்சம் பேர் வருகை தந்ததாக தெரிவித்துள்ள நிலையில், 3.5 லட்சம் பேர் மட்டுமே வருகை தந்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  ஆன்லைன் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதா? இல்லையா? என்ற கேள்விக்கு இருதரப்பினரும் முரணான தகவலை அளித்துள்ளனர்.  ஒரு விஜபி டிக்கெட் 300 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டிருந்தாலும், மொத்தமாக 45 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், விஜபி டிக்கெட் விற்பனையில் 4 கோடி ரூபாய் மட்டுமே கணக்கு காட்டப்பட்டிருக்கிறது.  அத்திவரதர் வைபவத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் கலந்து கொண்ட நிலையில், வெறும் 32 ஆயிரம் டிக்கெட் மட்டுமே விற்பனை செய்திருப்பதாகவும்  3 கோடியே 70 லட்ச ரூபாய் வருவாய்க் கணக்கு காட்டியிருப்பதன் மூலம் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
First published: