அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

பக்தர்களின் வசதிக்காக, தற்காலிகமாக இரண்டு தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

news18
Updated: August 10, 2019, 1:08 PM IST
அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
அத்திவரதர்
news18
Updated: August 10, 2019, 1:08 PM IST
அத்திவரதர் தரிசனம் இன்னும் ஆறு நாட்களுக்கு மட்டுமே நடைபெறவுள்ள நிலையில், இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் கடந்த ஜுலை ஒன்றாம் தேதி தொடங்கியது. இந்தநிலையில், 41-ம் நாளான இன்று, ஊதா நிறம் கொண்ட பட்டாடை அணிந்து, வண்ண மலர் அலங்காரத்துடன் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

வருகிற 16-ம் தேதியுடன் அத்திவரதர் வைபவம் நிறைவுறும் நிலையில், பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்துவருகின்றனர். இந்தநிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் கூட்டத்தை முறைப்படுத்துவதற்காக, 10,000 காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதேபோல், 1200 துப்புரவு பணியாளர்களுடன் சேர்த்து கூடுதலாக 500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக, தற்காலிகமாக இரண்டு தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

நேற்றைய தினம் மட்டும், 3,50,000 பக்தர்களும், இதுவரை 74 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களும் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

Also see...

Loading...

First published: August 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...