சயன கோலத்தில் இறுதிநாளில் அத்திவரதர்: மாலை 5 மணியுடன் தரிசனம் ரத்து!

நேற்று ஒரே நாளில் சுமார் இரண்டரை லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்த நிலையில், கடந்த 30 நாட்களாக 45,05,000 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

Web Desk | news18
Updated: July 31, 2019, 10:54 AM IST
சயன கோலத்தில் இறுதிநாளில் அத்திவரதர்: மாலை 5 மணியுடன் தரிசனம் ரத்து!
அத்திவரதர்
Web Desk | news18
Updated: July 31, 2019, 10:54 AM IST
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இறுதிநாளான இன்று சயன கோலத்தில் காட்சியளித்து வரும் அத்திவரதர், நாளை முதல் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க உள்ளார்.

கடந்த ஒன்றாம் தேதி முதல் வசந்த மண்டபத்தில் சயன கோலத்தில் இருக்கும் அத்திவரதரை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்து வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் சுமார் இரண்டரை லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்த நிலையில், கடந்த 30 நாட்களாக 45,05,000 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடைசி நாளான இன்று மஞ்சள் நிற பட்டாடையில் அத்திவரதர் அருள் பாலித்து வருகிறார்.


இந்நிலையில், நாளை முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை செய்ய வசதியாக இன்று தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளது. பொது தரிசனத்திற்கான நுழைவு வாயில் நண்பகல் 12 மணிக்கு மூடப்பட்டு, கோவில் வளாகத்தில் இருக்கக்கூடிய பக்தர்கள் மாலை 5 மணிவரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், விஐபி வரிசையில் வருபவர்கள் மாலை 3 மணிவரை அனுமதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தி வரதர் வைபவத்தில் இதுவரை 2,70,00,000 ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாகவும், நேற்று எண்ணப்பட்ட 6 உண்டியலில் 69,34,538 ரூபாயும் 25 கிராம் தங்கம் மற்றும் 274 கிராம் வெள்ளி இருந்ததாகவும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Also see...

Loading...

First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...