முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 2-வது உற்பத்தி ஆலையையும் ஓசூரில் அமைக்க உள்ள ஏதெர் நிறுவனம்.. உற்பத்தியை 3 மடங்கு அதிகரிக்கிறது..

2-வது உற்பத்தி ஆலையையும் ஓசூரில் அமைக்க உள்ள ஏதெர் நிறுவனம்.. உற்பத்தியை 3 மடங்கு அதிகரிக்கிறது..

புதிய ஆலை நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தித் திறனான 1,20,000 யூனிட்களை, ஆண்டுக்கு 4,00,000 யூனிட்டுகளாக உயர்த்தும் என்றும் Ather Energy நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஆலை நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தித் திறனான 1,20,000 யூனிட்களை, ஆண்டுக்கு 4,00,000 யூனிட்டுகளாக உயர்த்தும் என்றும் Ather Energy நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஆலை நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தித் திறனான 1,20,000 யூனிட்களை, ஆண்டுக்கு 4,00,000 யூனிட்டுகளாக உயர்த்தும் என்றும் Ather Energy நிறுவனம் தெரிவித்துள்ளது.

 • 1-MIN READ
 • Last Updated :

  நாட்டில் அதிகரித்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, எலெக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பு நிறுவனமான Ather Energy நிறுவனம் தமிழகத்தில் அதன் இரண்டாவது உற்பத்தி ஆலையை தொடங்க இருக்கிறது. தங்களது தயாரிப்பான 450X மற்றும் 450 Plus உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், விற்பனையை அதிகரிக்கும் பொருட்டும் இரண்டாவது உற்பத்தி ஆலையை ஓசூரில் அமைத்து உள்ளது Ather Energy நிறுவனம்.

  இந்த புதிய மற்றும் இரண்டாவது உற்பத்தி ஆலை எப்போது செயல்படத் தொடங்கும் என்பதற்கான சரியான தகவலை தற்போதைக்கு நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், இது "2022-ஆம் ஆண்டில் தயாராக இருக்கும்" என்று கூறி இருக்கிறது.

  விரைவில் கட்டமைக்கப்பட்ட உள்ள இந்த ஆலை நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தித் திறனான 1,20,000 யூனிட்களை, ஆண்டுக்கு 4,00,000 யூனிட்டுகளாக உயர்த்தும் என்றும் Ather Energy நிறுவனம் அறிக்கை ஒன்றில் தகவல் தெரிவித்து உள்ளது. முன்னதாக Ather Energy தனது முதல் உற்பத்தி ஆலையை இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓசூரில் அமைத்தது. தற்போது இரண்டாவது உற்பத்தி ஆலையையும் ஓசூரிலேயே அமைக்க நடவடிக்கையை தொடங்கி இருக்கிறது.

  இது தொடர்பான அறிக்கையில், தங்களது நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.650 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும் Ather Energy கூறி உள்ளது, இந்த முதலீடு தேவையின் அதிவேக எழுச்சியை பூர்த்தி செய்யவும், செயல்பாட்டு திறன் மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்துவம் பயன்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

  Also read:  இந்தியாவில் அறிமுகமானது Harley-Davidson-ன் புதிய Sportster S - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

  Ather Energy நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ-வான தருண் மேத்தா கூறுகையில், நாடு முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் தேவை அதிகரித்து வருகிறது. எங்களின் 450 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களான 450X மற்றும் 450 plus ஆகியவை இன்று நாட்டிலேயே சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருப்பதால், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் தீவிரம் காட்டுகிறோம். இதனை கருத்தில் கொண்டு எங்கள் அனுபவ மையங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன, மேலும் வரும் காலாண்டுகளில் எங்கள் சில்லறை வர்த்தகம் ஆறு மடங்கு அதிகரிக்கும் என்றார்.

  எங்கள் முதல் உற்பத்தி ஆலையை திறந்த 10 மதங்களுக்குள் முழு திறனுடன் செயல்பட்டு வருகிறோம். தற்போது இரண்டாவது உற்பத்தி ஆலையை 2022-க்குள் செயல்பட வைக்க தயராகி வருகிறது. இதன் மூலம் அடுத்த ஆண்டுக்குள் நாட்டின் மிகப்பெரிய EV தயாரிப்பாளராக மாற எங்கள் நிறுவனம் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது என்றும் கூறினார்.

  Also read:  புதிய கார் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்... ஹோண்டாவின் சூப்பர் ஆஃபர்

  நவம்பர் 2020 முதல் மாதந்தோறும் 20% விற்பனை வளர்ச்சியைக் கண்டு வருவதாகவும், அக்டோபரில் தங்களது சிறந்த விற்பனை விகிதத்தை பதிவு செய்துள்ளதாகவும் Ather Energy நிறுவனம் கூறி இருக்கிறது. மேலும் கடந்த ஆண்டை விட 12 மடங்கு வளர்ச்சியை பதிவுசெய்து, 100 மில்லியன் டாலர் வருவாய் விகிதத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2023-க்குள் 100 நகரங்களில் சுமார் 150 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை விரிவுபடுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

  First published: