ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 51 பேருக்கு எஸ் ஜீன் மாற்றம்!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 51 பேருக்கு எஸ் ஜீன் மாற்றம்!

வெளிநாட்டு பயணம் ஏதும் மேற்கொள்ளாமல் ஒருவருக்கு எஸ் மரபணு மாற்றம் ஏற்பட்டிருப்பது சமூக பரவலாக இருக்கலாம் என மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 51 பேருக்கு எஸ் ஜீன் மாற்றம் அடைந்துள்ளது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 47 வயது சர்க்கரை நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவருக்கு எஸ் மரபணு மாற்றம் கண்டறியப்பட்டது.

அவரிடமிருந்து முதலில் 41 பேருக்கு தொற்று பரவி அனைவருக்கும் எஸ் மரபணு மாற்றம் கண்டறியப்பட்டது. அதன் பின் மேலும் சிலருக்கு தொற்று பரவி தற்போது 51 பேருக்கு கொரோனா பாசிடிவ் உறுதி செய்யப்பட்டு எஸ் மரபணு மாற்றங்கள் கண்டறியப்பட்டன. இதில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அடக்கம்.

Also read... அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும் பொங்கல் பரிசு தொகுப்புகள் விநியோகிக்கப்படும்!

இவர்கள் அனைவருக்கும் ஒமைக்ரான் தொற்றாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்களின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Also read... முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுடன் சென்னையில் ஆலோசனை!

வெளிநாட்டு பயணம் ஏதும் மேற்கொள்ளாமல் ஒருவருக்கு எஸ் மரபணு மாற்றம் ஏற்பட்டிருப்பது சமூக பரவலாக இருக்கலாம் என மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்தார்.

First published:

Tags: Corona, Rajiv gandhi Hospital