Home /News /tamil-nadu /

கொரோனா சிகிச்சை மையத்தில் கும்மியடித்து பொங்கல் கொண்டாடிய நோயாளிகள்!

கொரோனா சிகிச்சை மையத்தில் கும்மியடித்து பொங்கல் கொண்டாடிய நோயாளிகள்!

கும்மியடித்து பொங்கல் கொண்டாடிய நோயாளிகள்

கும்மியடித்து பொங்கல் கொண்டாடிய நோயாளிகள்

கொரோனா நோயாளிகள் வீடுகளிலும் கொரொனா சிகிச்சை மையங்களிலும் தனிமைபடுத்திக் கொண்டு சிகிச்சையில் இருக்கின்றனர்.

  • News18
  • Last Updated :
கோவை கொடிசியா கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகள் கிராமிய  பாடல்கள் பாடி கும்மியடித்து  பொங்கல் பண்டிகையினை  கொண்டாட்டினர்.

கோவையில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நேற்று மாலை நிலவரப்படி 5000க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கின்றனர்.

இவர்கள் வீடுகளிலும் கொரொனா சிகிச்சை மையங்களிலும் தனிமைபடுத்திக் கொண்டு சிகிச்சையில் இருக்கின்றனர். நேற்று பொதுமக்கள் வீடுகளில் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடினர்.

Also read... தமிழ்நாட்டில் ஒரே நாளில் 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு: இன்று மட்டும் 26 பேர் உயிரிழப்பு

Also read... இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - முதல்வர் ஸ்டாலின்!

இந்நிலையில், கொடிசியா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வரும் கொரொனா தொற்றாளர்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து, கும்மியடித்து பாடல்கள் பாடி பொங்கல் பண்டிகையினை உற்சாகமாக கொண்டாடினர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Corona, Covid-19, Pongal

அடுத்த செய்தி