முகப்பு /செய்தி /தமிழ்நாடு / No Helmet, No Petrol: சென்னை போக்குவரத்து காவல் துறையின் முயற்சிக்கு நல்ல வரவேற்பு

No Helmet, No Petrol: சென்னை போக்குவரத்து காவல் துறையின் முயற்சிக்கு நல்ல வரவேற்பு

பெட்ரோல் நிலையம்

பெட்ரோல் நிலையம்

தலைக்கவசம் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது சென்னை போக்குவரத்து காவல்துறை.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

No Helmet No Petrolவிபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்பை குறைக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அந்த வரிசையில் சென்னையில் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் தலைக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதனோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாத பொக்கிஷம் மனித உயிர். அப்படியான உயிர்களை யாரோ ஒருவரின் கவனக்குறைவால் சாலை விபத்துக்களால் தினம் தினம் இழந்துக்கொண்டே இருக்கிறோம். விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக சாலை விபத்துக்களில் அதிக உயிரிழப்புகளை சந்திப்பவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள்தான் இதனை குறைப்பதற்காகவே அரசும் நீதிமன்றங்களும் தலைக்கவசத்தை கட்டாயமாக்கின.

போக்குவரத்து காவல் துறையும் தலைக்கவசம் அணியாதவர்கள் மீது வழக்குபதிவும், அபராதங்களும் விதிக்கின்றன. ஆனாலும் நம்மில் பலர் தலைக்கவசத்தை அணிவதில்லை.  கடந்த ஓராண்டில் மட்டும் சென்னையில் சாலை விபத்தால் 850 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 650 பேர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் விபத்தால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க  தலைக்கவசம் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது சென்னை போக்குவரத்து காவல்துறை. சென்னையில் உள்ள 450 பெட்ரோல் நிலையங்களில் இதுதொடர்பான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து காவல்துறையின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.

காவல் துறையின் உத்தரவின் படி பெட்ரோல் நிலைய ஊழியர்களும் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் தலைக்கவசம் அணிய அறிவுறுத்துகின்றனர். கணிசமான வாடிக்கையாளர்கள் இந்த அறிவிப்புக்கு பிறகு தலைக்கவசம் அணிய தொடங்கியிருப்பதாக கூறுகின்றனர் பெட்ரோல் நிலைய மேலாளர்கள்.

Also read... கிரெடிட் கார்ட் மூலம் வீட்டு வாடகை செலுத்தினால் பணச் சலுகை... அசத்தலனா திட்டம்

சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்தபோதிலும் தனியாரின் பங்களிப்பு தேவை என்பதால் பெட்ரோல் நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களின் உதவியை நாட இருப்பதாக கூறும் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் முதற்கட்டமாக பெட்ரொல் நிலையங்கள் மூலம் இதனை முன்னெடுத்திருப்பதாக கூறுகிறார்.

அதேபோல் மக்கள் தாங்களாக மனம் திருந்தி தலைக்கவசம் அணியவேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சியை மேற்கொண்டிருப்பதாகவும் தலைக்கவசம் அணியாமல் பெட்ரோல் நிலையத்திற்கு வரும் வாகன ஓட்டிகளுக்கும் பொட்ரோல் போடும் ஊழியருக்கும் குற்ற உணர்ச்சி ஏற்படும் அவை தலைக்கவசம் அணியவைக்கும் எனவும் அவர் கூறுகிறார்.

தலைக்கவசம் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது. அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிவோம் விபத்துக்களை தவிர்ப்போம் .

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Helmet, Petrol