உடும்பை கொன்று வசிய மை தயாரிப்பது குறித்து யூடியூபில் வீடியோ... ஜோதிடர் சிறையில் அடைப்பு

உடும்பை பிடித்து அதன் உறுப்புகளை தனி தனியாக அறுத்து காய வைத்து வசிய மை தயாரிப்பதாக ஜோதிடர் பெரியசாமி யூடியூப் பக்கத்தில் 9 மாதங்களுக்கு முன் வீடியோ பதிவிட்டுள்ளார்.

உடும்பை கொன்று வசிய மை தயாரிப்பது குறித்து யூடியூபில் வீடியோ... ஜோதிடர் சிறையில் அடைப்பு
கொன்று வசிய மை தயாரிப்பது குறித்து யூடியூபில் வீடியோ
  • Share this:
திருச்சி மாவட்டம் மணியங்குறிச்சியைச் சேர்ந்த ஜோதிடர் பெரியசாமி, வசிய மை தயாரிப்பு குறித்து தன்னுடைய யூடியூப் பக்கத்தில் 9 மாதங்களுக்கு முன் வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், உடும்பை பிடித்து அதன் உறுப்புகளை தனி தனியாக அறுத்து காய வைத்து வசிய மை தயாரிப்பதாக பெரியசாமி கூறியுள்ளார்.

ALSO READ : இரவு தூங்கும் முன் பால் குடிப்பது ஆபத்தா..?

இது வனத்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு அண்மையில் சென்றுள்ளது. உடனடியாக, வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 4 நாட்களுக்கு முன் திருமணம் முடிந்து, மாமியார் வீட்டிற்கு விருந்துக்கு சென்ற பெரியசாமியை, அவசரமாக ஜோதிடம் பார்க்க வேண்டுமென கூறி வரவழைத்து வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

 
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading