உலகளவில் தற்போது 300 மில்லியனுக்கும் மேற்பட்டோர் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2025-ம் ஆண்டு 400 மில்லியனாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் 10 சதவீதம் இந்தியாவில் இருப்பார்கள். தமிழ்நாட்டில் ஒரு லட்சத்தில் 1,000 - 2,000 பேருக்கு பாதிப்பு ஏற்படும். உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 2.50 லட்சம் பேர் ஆஸ்துமா பாதிப்பினால் உயிரிழக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆஸ்துமா குறித்த ட்னியா அமைப்பின் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
சரி... ஆஸ்துமா என்றால் என்னன்னு கேட்கலாம்... அது வேற ஒன்னுமில்லீங்க, நீண்டகால அலர்ஜியால் நுரையீரல் & சுவாசக் குழாய்களில் ஏற்படும் தாக்கத்தால் வரும் இளைப்பு நோய் ஆஸ்துமா எனப்படுகிறது. காற்று மாசு, தூசு அதிகமுள்ள இடங்களில் பணி, சுற்றுச் சூழல், ஒவ்வாமை உள்ளிட்ட காரணங்களினால் அலர்ஜி ஏற்படுகிறது. பெற்றோர் அல்லது மூதாதையர்களுக்கு ஆஸ்துமா இருந்தால் ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் ஆஸ்துமா தொற்று நோயும் அல்ல. குழந்தைகளுக்கு அதிகம் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆஸ்துமாவிற்கான உலக அமைப்பு ஆண்டுதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. இதன்படி இந்த ஆண்டிற்கான விழிப்புணர்வு கருப்பொருளாக, ’ஆஸ்துமா குறித்த தவறான புரிதலைப் போக்குவோம்’ என்று அறிவித்துள்ளனர்.
ஆஸ்துமாவிற்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்து, தொடர்ந்தால் முற்றிலும் குணப்படுத்தலாம். கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர்.
கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது.
மூன்றாவது அலைகுறித்தும் பேசப்படுகிறது. தடுப்பூசி, தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு, நிரம்பி வழியும் மருத்துவமனைகள் என கொரோனா குறித்த அச்சமும் தொடர்கிறது.
இந்நிலையில், உலக ஆஸ்துமா தினமான இன்று தமிழ்நாடு ஆஸ்துமா அலர்ஜி ஆராய்ச்சி நிறுவனத்தின் டாக்டர் கமல் கூறுகையில், ’ஆஸ்துமா, அலர்ஜியால் பாதிக்கப்பட்டோர் கொரோனா குறித்து அச்சப்படத் தேவையில்லை. மற்றவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான வாய்ப்பு போலவேதான், ஆஸ்துமா நோயாளிகளுக்கும் வாய்ப்புள்ளது. தற்போது முகக் கவசம் அணிவது மற்றவர்களை விட இவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். தனிமைப்படுத்தல், விழிப்புணர்வோடு இருந்தால் கொரோனா நெருங்காது.
குழந்தைகள் வெளியில் அதிக நேரம் விளையாடக் கூடாது. விளையாடி விட்டு வீட்டிக்கு வந்ததும் கை, கால்களை சோப்பு போட்டு கழுவ வேண்டும். குழந்தைகளுக்கும் முகக் கவசம் அணியும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.