ஜல்லிக்கட்டுக் காளையை அடக்கத் துடித்த வங்கி உதவி மேலாளருக்கு நேர்ந்த கதி!

ஜல்லிக்கட்டில் பங்கேற்க மிகுந்த ஆர்வத்துடன் வந்த விவேக், நிராகரிப்பால் கலங்கிவிட்டார். இதனால், மற்றொரு வாய்ப்பு வழங்குமாறு விவேக் கேட்கவே, மறுமுறையும் அவரது ரத்த அழுத்தம் சோதித்துப் பார்க்கப்பட்டது.

Web Desk | news18
Updated: January 12, 2019, 4:38 PM IST
ஜல்லிக்கட்டுக் காளையை அடக்கத் துடித்த வங்கி உதவி மேலாளருக்கு நேர்ந்த கதி!
விவேக்
Web Desk | news18
Updated: January 12, 2019, 4:38 PM IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களுக்கான  உடற்தகுதித் தேர்வுக்கு முதல் ஆளாக வந்த வங்கி உதவி மேலாளர் ஒருவர் உயர் ரத்த அழுத்தம் காரணமாக நிராகரிக்கப்பட்டார். பல முறை மருத்துவக் குழுவினரிடம் கெஞ்சிக் கேட்டும், போட்டியில் பங்கேற்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.


உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த விவேக், கோவையில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றுகிறார். மதுரை, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரராகப் பங்கேற்க முன்பதிவு நடப்பதாக தகவல் வெளியானது. இதை அறிந்த விவேக், நேற்று இரவே மதுரை வந்தார்.

உடற்தகுதித் தேர்வில் நிராகரிக்கப்பட்ட விவேக் (ஜெர்கின் அணிந்துள்ளவர்). (Image: News 18)


அலங்காநல்லூரில் விடிய விடியக் காத்திருந்து, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மத்தியில் முதல் டோக்கனை பெற்றார் விவேக். ஆனால் மருத்துவப் பரிசோதனையின்போது, ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகக் கூறி அவரது விண்ணப்பத்தை மருத்துவர்கள் நிராகரித்தனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்க மிகுந்த ஆர்வத்துடன் வந்த விவேக், நிராகரிப்பால் கலங்கிவிட்டார். இதனால், மற்றொரு வாய்ப்பு வழங்குமாறு விவேக் கேட்கவே, மறுமுறையும் அவரது ரத்த அழுத்தம் சோதித்துப் பார்க்கப்பட்டது.

ரத்த அழுத்தம் பரிசோதனையில் விவேக்.


ஆனால், இரண்டாம் முறையும் அவரது ரத்த அழுத்தம் அதிகமாகத் தான் இருந்தது. இதனால் வேறு வழியின்றி அவரது விண்ணப்பத்தை மருத்துவர்கள் நிராகரித்தனர். இதனால் ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்கள் மத்தியில் விடிய விடியக் காத்திருந்த விவேக், ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியாமல் சோகமாக வெளியேறினார்.
Loading...
மேலும் பார்க்க: மோடி ஆட்சி வீட்டிற்கு செல்லும் நேரம் நெருங்கிவிட்டது - அப்சரா ரெட்டி
First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...