பிப்ரவரி 25-ம் தேதி 45 கம்பெனி துணை ராணுவப்படை தமிழகம் வருகை

துணை ராணுவப்படை

தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக முதல் கட்டமாக 45 கம்பெனி துணை ராணுவப் படையினர், வரும் 25-ம் தேதி வர உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 • Share this:
  சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழகத்துக்கு முதல்கட்டமாக 45 கம்பெனி துணை ராணுவப் படையினர் வரும் 25-ம் தேதி வர உள்ளனர்.

  தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஏப்ரல், மே மாதங்களில் வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர், கடந்த 10 மற்றும் 11-ம் தேதிகளில் நேரில் ஆய்வுசெய்தனர்.

  கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி தேர்தலை நடத்தும் வகையில், கூடுதலாக 25 ஆயிரம் வாக்குச்சாவடிகளை அமைக்கவும், வாக்களிப்பதற்கு கூடுதலாக ஒரு மணிநேரம் அளிக்கவும் முடிவுசெய்யப்பட்டதாக சுனில் அரோரா தெரிவித்தார். தமிழகத்துக்கு போதிய அளவில் துணை ராணுவப் படையினர் அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

  இந்நிலையில், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக முதல் கட்டமாக 45 கம்பெனி துணை ராணுவப் படையினர், வரும் 25-ம் தேதி வர உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு கம்பெனியிலும் 100 முதல் 150 வீரர்கள் வரை இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. தமிழகத்துக்கு வந்த பின்னர், துணை ராணுவப் படையினர் பிரித்து அனுப்பப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
  Published by:Vijay R
  First published: