Home /News /tamil-nadu /

உங்கள் தொகுதி : மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி அறிந்ததும், அறியாததும்

உங்கள் தொகுதி : மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி அறிந்ததும், அறியாததும்

உங்கள் தொகுதி : மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி அறிந்ததும், அறியாததும்

இன்றைய உங்கள் தொகுதி... அறிந்ததும் அறியாததும் தொகுப்பில் நாம் பார்க்கப்போகும் சட்டமன்றத் தொகுதி... மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள தொண்டாமுத்தூர்... உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொகுதி இது...

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  கோயம்புத்தூரின் புறநகர் தொகுதி தொண்டாமுத்தூர்... இங்கே சிறுவாணி சாலையில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயில் கரிகால் சோழனால் 1,800 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது. சுந்தரரால் தேவாரத்தில் பாடப் பெற்ற இந்த கோயிலில் பங்குனி உத்திரம் வெகு விமரிசையாக நடைபெறும். முக்கிய சுற்றுலாத் தலமான கோவை குற்றால அருவி இந்தத் தொகுதியில்தான் இருக்கிறது. செம்மேடு அருகே 1992ல் தொடங்கப்பட்ட ஈஷா யோகா மையத்திற்கு பிற மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி பல நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மகா சிவராத்திரியில் பல்லாயிரம் பேரோடு நிகழ்ச்சி நடைபெறும்.

  பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக கோவை வளாகம், காருண்யா பல்கலைக்கழகம், சட்டக் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி என இங்கே கல்வி நிலையங்கள் ஏராளம். நொய்யல் ஆறு இங்கிருந்து தொடங்கி இருகூர், திருப்பூர், ஒரத்துப்பாளையம் வழியாக கரூர் அருகே நொய்யலில் காவிரியுடன் கலக்கிறது. சின்னாறு, பெரியாறு, சித்திரச்சாவடி தடுப்பணை, நொய்யல் ஆறு உள்ளிட்டவற்றால் குறைவின்றி நீர் வளம் கொண்ட இந்த தொகுதியில், 3000 ஏக்கர் அளவில் சின்னவெங்காயம், தக்காளி, வாழை உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன.

  தொண்டாமுத்தூரில் அதிகபட்சமாக அதிமுக 6 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வாகை சூடியுள்ளன. மார்க்சிஸ்ட், தமிழ் மாநில காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை வென்றுள்ளன.

  2016ம் ஆண்டில் அப்போது எம்எல்ஏவாக இருந்த எஸ்.பி.வேலுமணி மீண்டும் அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டார். எஸ்.பி.வேலுமணிக்கு 1,09,519 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சையது முகமது 45,478 வாக்குகள் பெற்று தோற்றார். தொண்டாமுத்தூர் தொகுதியில் 3,24,053 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 1,63,398 பேர் பெண்கள். 1,60,579 பேர் ஆண்கள். 76 பேர் திருநங்கைகள்.

  விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டு தக்காளி பதப்படுத்தும் நிலையம் மற்றும் சேமிப்புக் கிடங்கிற்கான பணிகள் நடக்கின்றன. நொய்யல் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மலையை ஒட்டிய பகுதி என்பதால் காட்டுப் பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.

  மலையோர குடியிருப்பு பகுதிகளில் யானைகளின் நடமட்டம் அதிகமாக இருப்பதும் மக்களுக்கு தீராத பிரச்னையாக இருக்கிறது. உள்ளாட்சித் துறை அமைச்சரின் தொகுதி என்ற அந்தஸ்துடன் இந்த முறை தேர்தலை சந்திக்கிறார்கள் தொண்டாமுத்தூர் வாக்காளர்கள். எஸ்.பி.வேலுமணியின் ஹாட்ரிக் கனவு பலிக்குமா... பார்க்கலாம்...

  மேலும் படிக்க...உங்கள் தொகுதி : அவினாசி சட்டமன்றத் தொகுதி அறிந்ததும், அறியாததும்
  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Coimbatore, TN Assembly Election 2021

  அடுத்த செய்தி