எதிரிகளாக இருக்கும் ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஒன்றாக இருப்பது போல் நடிக்கின்றனர்: ஸ்டாலின் விமர்சனம்

திமுக தலைவர் ஸ்டாலின்

எதிரிகளாக இருக்கும் ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஒன்றாக இருப்பது போல் நடிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

 • Share this:
  ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தனது பிரச்சார பயணத்தின் மூன்றாம் நாளாக பூவிருந்தவல்லி நசரத்பேட்டை ஊராட்சி பகுதியில் மக்களின் குறைகளை ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர், ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்கவும், கொள்ளை அடித்த பணத்தை காக்கவுமே இபிஎஸ் - ஓபிஎஸ் ஒன்றாக இருப்பது போல நடிப்பதாக விமர்சித்தார்.

  தொடர்ந்து, எம்.ஜி.ஆருடன் இருக்கும் புகைப்படத்தைக் காட்டிய ஸ்டாலின், அரசியலுக்கு வர வேண்டும் என தனக்கு அறிவுரை கூறியது எம்.ஜி.ஆர்.தான் என தெரிவித்தார். முதலமைச்சர் பழனிசாமி, எப்போதாவது எம்.ஜி.ஆரை பார்த்தது உண்டா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

  திருநின்றவூர் ஏரி தூர்வாரி சீரமைக்கப்படும் எனக் குறிப்பிட்ட ஸ்டாலின், இந்தத் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ.. பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக இல்லாமல், இந்தி வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பதாகவும் சாடினார்.

  திருத்தணியில் தனக்கு வேல் பரிசாக அளிக்கப்பட்டது குறித்து பேசிய ஸ்டாலின், கடவுளை தாங்கள் வெறுக்கவில்லை என்றும், வேண்டுமென்றே திட்டமிட்டு தங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

  மேலும் படிக்க...சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தி தமிழகம் வந்தால் அவர் மீது வழக்கு தொடுக்கப்படும்: அமைச்சர் சிவி.சண்முகம்

  முன்னாத பிரசார கூட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக் கொண்ட ஸ்டாலின், அவற்றை பெட்டியில் இட்டு, சீல்வைத்து பூட்டினார்.

  திருவண்ணாமலை ஆரணியில் எழிலரசி என்ற பெண்ணுக்கு 2 மாதங்களுக்கு முன்னதாகவே அரசு அறிவித்த நிவாரணத் தொகையை வழங்கிவிட்டதாக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி ட்விட்டரில் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும், முடிந்தால் தன் மீது வழக்கு போடடுங்கள் என சவால் விடுத்தார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: