Home /News /tamil-nadu /

உங்கள் தொகுதி : பூம்புகார் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

உங்கள் தொகுதி : பூம்புகார் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

உங்கள் தொகுதி : பூம்புகார் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

கண்ணகியின் ஊரான பூம்புகார் பற்றி ‘உங்கள் தொகுதி அறிந்ததும்... அறியாததும்...’ பகுயியில் பார்க்க இருக்கிறோம்,

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  காவிரி ஆறு கடல் புகும் இடம் என்பதால் காவிரிப் பூம்பட்டினம் என அழைக்கப்பட்ட ஊர் இன்றைய பூம்புகார்... சங்ககாலத்தில் பூம்புகார் எப்படி இருந்தது என பட்டினப்பாலையில் வர்ணனைகள் உண்டு.  கிறிஸ்தவ மதத்தை பரப்ப ஜெர்மனியில் இருந்து 1706ல் தரங்கம்பாடிக்கு வந்த சீகன் பால்கு, தமிழகத்தில் அச்சு இயந்திரத்தை நிறுவி பழைய ஏற்பாடு நூலை தமிழில் அச்சடித்தார். தென்னாப்ரிக்காவில் காந்திக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய வள்ளியம்மை பிறந்த தில்லையாடி பூம்பூகார் தொகுதியில்தான் உள்ளது.

  முக்கியமான சைவ மடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதினம் இந்த தொகுதியில்தான் உள்ளது. ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்தபோது மவுண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலைப் பெற்று புனித நீர் தெளித்த ஜவஹர்லால் நேருவிடம் வழங்கிய பெருமை திருவாவடுதுறை ஆதீன மடத்தின் கட்டளை தம்பிரானாக இருந்த சடைச்சாமிக்கு கிடைத்தது.

  பூம்புகார், தரங்கம்பாடி உள்ளிட்ட 13 மீனவ கிராமங்களில் 1,800 பைபர் படகுகளிலும் 188 விசைப்படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். உளுந்து, நிலக்கடலைகள் விளைந்தாலும் அதிகபட்சமாக 28 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்படுகிறது. கீழப்பெரும்பள்ளம் கேது கோயில், தரங்கம்பாடி மாசிலாநாதர் கோயில் என ஆன்மிகத் தலங்களுக்கு குறைவில்லாத தொகுதி பூம்புகார்...

  இங்கே அதிகபட்சமாக அதிமுக 6 முறை வென்றுள்ளது. அதில் என்.விஜயபாலன், எஸ்.பவுன்ராஜ் ஆகியோர் தலா இருமுறை வெற்றி பெற்றுள்ளனர். திமுக 3 முறையும், பாமக ஒரு முறையும் வெற்றிக் கொடி நாட்டியுள்ளன.

  2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் அப்போது எம்எல்ஏவாக இருந்த அதிமுகவின் எஸ்.பவுன்ராஜ் மீண்டும் களம் கண்டார். 87 ஆயிரத்து 666 வாக்குகள் பெற்ற அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் ஷாஜஹானை 19,935 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

  தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னமேடு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை பிரச்னை தீர்க்கப்படாமல் தொடர் கதையாக இருக்கிறது. விளைநிலங்கள் வழியாக கெயில் எண்ணெய் குழாய் அமைக்க விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிற்னர்.

  மேலும் படிக்க... உங்கள் தொகுதி : 25 ஆண்டுகளாக திமுக ஆதிக்கம் செலுத்தி வரும் திருவாரூர்

  மயிலாடுதுறை நகராட்சியின் பாதாளச்சாக்கடைத் திட்ட கழிவு நீரை செம்பனார் கோயில் தொகுதியில் உள்ள சத்தியவான் வாய்க்காலில் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் அப்பகுதி மக்கள், ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் இந்த தேர்தலை வரவேற்கத் தயாராகிவிட்டார்கள் ...

  கண்ணகி பூமியில் இந்த முறை கால் பதிக்கப் போவது யார்... விடை காண காத்திருப்போம் சில மாதங்கள்...

   

     உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Mayiladuthurai, TN Assembly Election 2021

  அடுத்த செய்தி