தமிழகத்தில் பின்னலாடை உற்பத்திக்கு புகழ் பெற்ற தொழில் நகரமான திருப்பூரில் ஆண்டிற்கு 48000கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது. கட்சிகளுக்கு தேவையான கொடிகள், டி சர்ட், தொப்பிகள் தயாரித்து வழங்குவதிலும் திருப்பூர்தான் முன்னணியில் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கட்சிக் கொடிகள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுவதுடன் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதியாகிறது.
கொரோனா பொதுமுடக்கம், நூல் விலை உயர்வால் புதிய ஆர்டர்களை பெற முடியாததால் பின்னலாடை தொழிலில் சுணக்கம் ஏற்பட்டது. இந்த தொழிலை நம்பி இருக்கும் 10 லட்சம் தொழிலாளர்களில் பலர் வேலை இழக்கும் சூழல் உருவானது. இந்த சூழ்நிலையில் தேர்தல் அறிவிப்பால் கட்சி கொடிகள், தொப்பி, டி-சர்ட் போன்ற பொருட்களின் உற்பத்தியும், தேவையும் அதிகரித்திருப்பதால் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இருப்பினும் ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேதி முன் கூட்டியே அறிவிக்கப்பட்டதை இந்த தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் பின்னடைவாக பார்க்கிறார்கள்.
இந்தமுறை வேட்பாளர்கள் அறிவிப்பும் தாமதமானதால் இனிமேல்தான் தங்களுக்கு அதிகளவில் ஆர்டர்கள் வரும் என்றும், குறுகிய காலத்திற்குள் அவசர, அவசரமாக உற்பத்தி செய்ய வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். டி-சர்டுகள், தொப்பிகள் தயாரிக்க போதுமான கால அவகாசம இல்லாத நிலையில் கொடிகள் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறுகின்றனர் உற்பத்தியாளர்கள்.
மேலும் படிக்க... மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்: சினேகன், பொன்ராஜ் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு
தேர்தல்தான் எங்களுக்கு பண்டிகை காலம் என்று தெரிவிக்கும் கொடி தயாரிப்பாளர்கள், அதிகமான ஆர்டர்கள் இருந்தும் அதனை செய்து கொடுக்க போதிய அவகாசம் இல்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Election 2021, Party flag, Thiruppur, TN Assembly Election 2021