முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உங்கள் தொகுதி: மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி அறிந்ததும் அறியாததும்

உங்கள் தொகுதி: மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி அறிந்ததும் அறியாததும்

உங்கள் தொகுதி: மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி அறிந்ததும் அறியாததும்

சென்னையின் இதயமாய், கோயில்கள் சூழ்ந்த பகுதியாய் விளங்கும் மயிலாப்பூர் தொகுதிதான், இன்றைய உங்கள் தொகுதி அறிந்ததும் அறியாததும் செய்தித் தொகுப்பில் பார்க்க போகிறோம்...

  • Last Updated :

சென்னை மாநகரில் வரலாற்று ரீதியாக மிகவும் பழமையான பகுதி மயிலாப்பூர்... கயிலையே மயிலை மயிலையே கயிலை என கூறும் அளவுக்கு மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயில், காரணீஸ்வரர் கோயில் என திரும்பும் திசையெல்லாம் வழிபட ஏழு சிவாலயங்கள் இருக்கின்றன. அதனால் ஆண்டு முழுவதும் சாமி ஊர்வலங்களுக்கும், திருவிழாக்களுக்கும் பஞ்சமில்லை... தமிழகத்தில் சமணம் தலைத்தோங்கிய காலத்தில் இங்கே சமணப்பள்ளியும் இருந்திருக்கிறது. இயேசுவின் தூதர்களில் ஒருவரான செயின்ட் தாமஸ் அடக்கம் செய்ததாக கருதப்படும் இடத்தில் அமைந்துள்ள சாந்தோம் தேவாலயம் கிறிஸ்தவர்களின் முக்கியமான வழிபாட்டுத் தலம்.

அன்றைய வங்காளம் தாண்டி வெளியே அமைக்கப்பட்ட முதல் ராமகிருஷ்ணா மடம் மயிலாப்பூரில்தான் அமைந்துள்ளது. திருவள்ளுவர் இங்கே பிறந்ததாக கருதப்படுவதால் அவருக்கு கோயில் கூட உண்டு. மெரினாவில் 127 ஆண்டுகளாய் கம்பீரமாய் நிற்கும் கலங்கரை விளக்கம், இந்த தொகுதியின் அடையாளம். கனிமொழி, ஏவிஎம் சரவணன் என சினிமா, அரசியல் பிரபலங்கள் பலர் வசிக்கும் இந்த தொகுதியில், வழக்கறிஞர்கள், மத்திய, மாநில அரசு பணிகளில் உள்ளவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ராமகிருஷ்ணா கல்லூரி, சமஸ்கிருத கல்லூரி மற்றும் சங்கீத சபாக்கள் உள்ள தொகுதி...

ஒரு காலத்தில் திமுகவின் கோட்டையாக இருந்த மயிலாப்பூரில் கடந்த 3 முறையும் தொடர்ந்து வென்று அதிமுக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதிமுக 6 முறையும், திமுக 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2001 ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த கே என் லட்சுமணன் வெற்றி பெற்றிருக்கிறார்.

கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சர்பில் போட்டியிட்ட ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆர்.நடராஜ் 14,728 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 68,176 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரசின் கராத்தே தியாகராஜனுக்கு 53,448 வாக்குகளும் கிடைத்தன. மயிலாப்பூரில் மொத்தமுள்ள 2,69,400 பேரில் 1,38,739 பேர் பெண்கள். 1,30,621 பேர் ஆண்கள். 40 பேர் திருநங்கைகள்.

மேலும் படிக்க...உங்கள் தொகுதி: கோவையின் தொழில் வளம் மிக்க தொகுதிகளில் ஒன்று சிங்காநல்லூர் அறிந்ததும் அறியாததும்

நொச்சிக்குப்பம், டுமீங்குப்பத்தில் நிரந்தர மீன் விற்பனை கடைகள் கட்டித் தர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் மீனவர்கள். சிறிய மழைக்கே தெருக்களில் தண்ணீர் தேங்கிவிடுவது மயிலாப்பூர் தொகுதியில் தீர்க்கப்படாத பிரச்னையாக நீடிக்கிறது. முக்கிய சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால் பல இடங்களில் மேம்பாலங்கள் இருந்தாலும் ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் தேவாலய சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இன்றும் தொடர்கிறது. பிரச்னைகள் பல இருந்தாலும் இந்த தேர்தல் நடக்கும் சூழலை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள் இந்த தொகுதி வாக்காளர்கள்.

15 ஆண்டுகளாக வெற்றிக் கொடி பறக்க விடும் அதிமுக இந்த முறையும் மயிலாப்பூரில் வாகை சூடுமா... விடையை ஆள்காட்டி விரலில் ஒளித்து வைத்திருக்கிறார்கள் வாக்காளர்கள்.

' isDesktop="true" id="410435" youtubeid="0sO4Xuj_jNg" category="tamil-nadu">

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Mylapore Temple, TN Assembly Election 2021