• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • உங்கள் தொகுதி : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

உங்கள் தொகுதி : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

Youtube Video

உங்கள் தொகுதி அறிந்ததும்... அறியாததும் தொகுப்பில் இன்று நாம் பார்க்கப்போவது ஜவுளி விற்பனைக்கு பெயர் பெற்ற  தொகுதி... உங்கள் தொகுதி: பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண் ஈரோடு.

 • Share this:
  பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண் ஈரோடு... ஈரோடு நகர்மன்ற தலைவராக 1917ம் ஆண்டு முதல் 1919ம் ஆண்டு வரை பெரியார் பதவி வகித்தார். ஈரோடு நகரம் கிழக்கு, மேற்கு என இரு சட்டமன்றத் தொகுதிகளை கொண்டிருக்கிறது. கிழக்கு தொகுதி பரப்பளவில் மிகவும் சிறியது. இந்தத் தொகுதிக்குள்தான் பெரியார் வாழ்ந்த வீடு அவர் பயன்படுத்திய பொருட்களுடன் நினைவில்லமாக நிற்கிறது. நகரத்திற்குள்ளேயே முடிந்துவிடக் கூடிய தொகுதி என்பதால் விவசாயம் இல்லை. அதேநேரம் ஜவுளித் தொழிலின் மையமாகத் திகழ்கிறது.

  இதன் மூலம் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நேரடியாகவும், மறைமுகமாவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். துணிகளுக்கு சாயமிடுதல் , ப்ளிச்சிங் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 500க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் மற்றும் சலவை ஆலைகள் செயல்படுகின்றன.

  இங்கு அப்துல் கனி சந்தை பகுதியில் திங்கள்கிழமை நடக்கும் இரவு சந்தையில் மட்டும் சுமார் 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஜவுளி வாங்க வியாபாரிகள் வந்து குவிவார்கள்.

  2008ம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது ஈரோடு சட்டமன்றத் தொகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு தொகுதி உருவானது. அதன் பின்பு நடந்த இரு தேர்தல்களிலும் அதிமுக கூட்டணியே வென்றுள்ளது. 2011ல் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவின் வி.சி.சந்திரகுமாரும், 2016ல் அதிமுகவின் தென்னரசும் வாகை சூடினர்.

  2016 தேர்தலில் அப்போதைய எம்எல்ஏ வி.சி.சந்திரகுமார் தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து களம் கண்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் தென்னரசு 7,794 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

  ஈரோடு கிழக்கு தொகுதியில் 2,26,936 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 1,15,987 பேர் பெண்கள், 1,10,934 பேர் ஆண்கள். 15 பேர் திருநங்கைகள்.

  ஈரோடு கிழக்கு தொகுதியில் செயல்படும் சாய மற்றும் தோல் ஆலைகள், சிறு, குறு தொழிற்சாலைகளில் இருந்து தினமும் ஒரு லட்சம் லிட்டர் அளவுக்கு வெளியேறும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக காவிரியில் கலப்பது மக்களுக்கு சுகாதாரச் சீர்கேட்டை அளித்து வருகிறது. அதனால் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் தேவை என நெடுநாட்களாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தாலும் யாரும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

  போக்குவரத்து நெரிசலும், 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாதாளச்சாக்கடைத் திட்டப் பணிகளும் தீராத பிரச்னையாக நீடிக்கிறது. இதற்கெல்லாம் இந்த முறையாவது விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வாக்களிக்கத் தயராகிவிட்டனர் மக்கள். ஜவுளி நகரத்தை அதிமுக தக்கவைத்துக் கொள்ளுமா.. விடை தெரிந்து கொள்ள சில மாதங்கள் பொறுத்திருப்போம்...

  மேலும் படிக்க...உங்கள் தொகுதி : விருதுநகர் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

  வீடியோ

     உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: