• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உங்கள் தொகுதி : அவினாசி சட்டமன்றத் தொகுதி அறிந்ததும், அறியாததும்

உங்கள் தொகுதி : அவினாசி சட்டமன்றத் தொகுதி அறிந்ததும், அறியாததும்

Youtube Video

உங்கள் தொகுதி அறிந்ததும் அறியாததும்... தொகுப்பில் இன்று நாம் பார்க்கப்போகும் தொகுதி அவினாசி...

  • Share this:
    நாயன்மார்களில் சுந்தரரால் பாடப்பெற்ற தலம் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில்... ஊர் பெயருக்கும் இந்த ஆலயமே காரணம்... விவசாயமே பிரதானமான இந்த தொகுதியில் அவினாசி, சேவூர், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. பெரும்பாலும் நிலத்தடி நீரை நம்பி தென்னை, வாழை, நெல், கீரை அதிகமாக பயிரிடப்படுகின்றன. விவசாயம் தவிர்த்து 120 ஸ்பின்னிங் மில்களும், 45 ஜின்னிங் மில்களும் பருத்தியில் இருந்து பஞ்சை பிரித்தெடுத்து நூலாக மாற்றி திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்புகின்றன. 1,500 விசைத்தறிகளை நம்பி 5 ஆயிரம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா என்ற பின்னலாடை தொழிற்பேட்டை மூலம் பின்னலாடை துறையில் அடியெடுத்து வைத்த அவினாசி இன்று 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் 8 ஆயிரம் பேருக்கு வேலை தருகிறது. சிற்பத் தொழிலுக்கு பெயர் பெற்ற திருமுருகன் பூண்டியில் 50 கூடங்களில் ஆயிரம் கலைஞர்கள் கல்லிலே கலைவண்ணம் கண்டுகொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் வருமானம் தரும் தொழில் இது....

    அதிமுக இதுவரை 7 முறை வென்றுள்ள தொகுதி அவினாசி. காங்கிரஸ் 3 முறையும், திமுக 1996ம் ஆம் ஆண்டு ஒரே ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதைய சபாநாயகர் தனபால் 2016ம் ஆண்டு அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் ஆனந்தன் போட்டியிட்டார். 93,366 வாக்குகள் பெற்ற தனபால் 30,674 வாக்குகள் வித்தியாசத்தில் ஆனந்தனை தோற்கடித்தார்.

    அவினாசியில் 2,80,731 வேட்பாளர்கள் உள்ளனர். அதில் 1,44,294 பேர் பெண்கள், 1,36,431 பேர் ஆண்கள். 6 பேர் திருநங்கைகள். 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவில் இருந்து அவினாசிக்கு நீர் கொண்டு வரும் திட்டம் அப்போதைய முதல்வர் ஜெயலிதாவால் தொடங்கப்பட்டு தற்போதைய முதல்வர் பழனிசாமியால் 1,532 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படுவது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

    மேலும் படிக்க...  உங்கள் தொகுதி : தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

    நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட கூலி உயர்வு 6 ஆண்டுகளாக கைக்கு வந்து சேரவில்லை. சேயூர் பேருந்து நிலையம், வேளாண் ஆராய்ச்சி மையம் என கோரிக்கை பட்டியல் சற்றே பெரியது... குறைகள் ஆயிரம் இருந்தாலும் தேர்தலில் வாக்களிக்கத் தயாராகிவிட்டனர் மக்கள்....

    2016 ம் ஆண்டு அ.தி.மு.க. வேட்பாளர் தனபால் 93,366 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் 62,692 வாக்குகள் பெற்றுள்ளார். வாக்கு வித்யாசம் 30,674




    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: