• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழக விவசாயிகளுக்கு 5000 கோடி வங்கி கணக்கில் செலுத்தியுள்ளோம் - விழுப்புரத்தில் அமித்ஷா உரை

தமிழக விவசாயிகளுக்கு 5000 கோடி வங்கி கணக்கில் செலுத்தியுள்ளோம் - விழுப்புரத்தில் அமித்ஷா உரை

அமித் ஷா

அமித் ஷா

சென்னை இரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இரயில் நிலையங்களில் தமிழல் அறிவிப்பு செய்யப்படுகிறது.

  • Share this:
    தமிழக விவசாயிகளுக்கு 5000 கோடி வங்கி கணக்கில் செலுத்தியுள்ளோம் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

    தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஆதரவாக உள்துறை அமித்ஷா விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரபரப்புரையில் உரையாற்றினார். அப்போது, தலித் மக்கள், ஆதிவாசி மக்கள் அவர்களின் திட்டங்கள் குறித்து யோசிக்கும் போது எம்.ஜி.ஆர் நினைவுக்கு வருகிறார். எம்.ஜி.ஆர் திட்டத்தை ஜெயலலிதா நிறைவேற்றி வந்தார். இதனை பின்பற்றி மோடி அரசு நாடு முழுதும் பின்பற்றி வருகிறது.

    இந்த நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் மோடி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் உள் நுழைந்து நாம் தாக்குதல் நடத்தினோம்.

    ராணுவம், பொருளாதாரம் ஆகியவற்றில் நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் காங்கிரஸ், திமுக குடும்ப ஆட்சி பற்றி சிந்தித்து வருகிறது. காங்கிரஸ் ராகுலையும், திமுக உதயநிதி ஸ்டாலினை தலைவராக்க முயன்று வருகிறது. திமுக ஊழல் பற்றி பேசும்போது எனக்கு சிரிப்பு வருகிறது. முதலில் உங்கள் வீட்டை பாருங்கள், 2ஜி ஊழல் நாடே அறியும்.

    தேசிய கல்வி கொள்கை உள்ளுர் மொழியில் இருக்கும்படி கொண்டு வந்துள்ளோம். ஜல்லிக்கட்டு பார்க்க ராகுல்காந்தி வருகிறார். ஆனால் காங்கிரஸ் அரசில் தான் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது. அதனை பாஜக ஆட்சி மீண்டும் கொண்டு வந்தது. இங்குள்ள பன்னீர்செல்வம், பழனிசாமிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட நிர்வாகம் தமிழ்நாட்டு நிர்வாகம். நல்லாட்சி விருது தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

    நீர் மேலாண்மைக்கு விருது தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. மாவட்ட முன்னேற்றத்திலும் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.
    மோடி அரசு தமிழக முன்னேற்ற திட்டங்களின் துணையாக இருக்கிறது. திட்டங்களை செயல்படுத்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் துணையாக இருக்கிறார். இந்த கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். மாநிலத்தின் சாலைகளை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி மோடி கொடுத்துள்ளார்.

    சென்னை மெட்ரோ திட்டத்திற்கு 63ஆயிரம் கோடி கொடுத்துள்ளது. மேலும் 33 கோடி ரூபாய் மற்ற திட்டங்களுக்கு மோடி அரசு வழங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு 5000 கோடி வங்கி கனக்கில் செலுத்தியுள்ளோம். கொரோனா திட்டத்தில் நபார்டு வங்கி மூலம் 30,000 கோடி வழங்கியுள்ளது. 20,000 கோடியில் மீன் பிடிக்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை இடையே தேஹாஸ் விரைவி இரயில் சென்னையில் இருந்து விடப்பட்டுள்ளது. சென்னை இரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இரயில் நிலையங்களில் தமிழல் அறிவிப்பு செய்யப்படுகிறது.

    மத்திய அரசோடு மோதல் போக்கை கடைபிடிக்கும் ஆட்சி வேண்டுமா அல்லது இனக்கமாக இருக்கும் ஆட்சி வேண்டுமா?
    தமிழக மக்கள் விரைவில் முடிவு செய்யும் சூழல் உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக அல்லது குடும்ப ஆட்சிக்கு வாக்களிக்கப் போகிறோமா என முடிவெடிக்க வேண்டும் என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: