மதிமுக போட்டியிடும் தொகுதிகள் எவை?

மதிமுக போட்டியிடும் தொகுதிகள் எவை?

மு.க.ஸ்டாலின் - வைகோ

6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார்.

  • Share this:
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆறு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார்.

இந்நிலையில், மதிமுக போட்டியிடும் தொகுதிகள் பற்றி தகவல் வெளியாகி இருக்கின்றது. அதன்படி, 4 பொதுத் தொகுதிகளிலும், 2 தனித்தொகுதிகளிலும் அக்கட்சி போட்டியிடும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சாத்தூர், கோவை வடக்கு, மதுரை தெற்கு, அரியலூர் ஆகிய 4 பொது தொகுதிகளிலும், வாசுதேவநல்லூர், மதுராந்தகம் ஆகிய இரண்டு தனி தொகுதிகளிலும் மதிமுக போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் இம்மாதம் 12 ஆம் தேதி (நாளை மறுநாள்) தொடங்க உள்ளது. இதனால், தேர்தல் களம் பரபப்பாகக் காணப்படுகின்றது. இதனால், தொகுதிகளை அடையாளம் காண்பது, வேட்பாளர் தேர்வு போன்ற முக்கிய பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

Must Read : 174 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டி...187 இடங்களில் களம்காணும் உதயசூரியன்

 

திமுக கூட்டணியில், திமுக 174 தொகுதிகள் நேரடியாக களம்காண உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் வீதம் 24 தொகுதிகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3 தொகுதிகளும், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி வீதம் 3 தொகுதிகள் என தற்போதுவரை 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published: