இன்று மாலையுடன் ஓய்கிறது இடைத்தேர்தல் பிரசாரம்...!

ஸ்டாலின் மற்றும் பழனிசாமி
- News18
- Last Updated: October 19, 2019, 9:52 AM IST
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து இன்றுடன் பரப்புரை நிறைவடைகிறது. இந்நிலையில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்களின் வார்த்தை மோதல் முற்றியுள்ளது.
நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட முன்னீர்பள்ளம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டம்- ஒழுங்கை பேணிக் காப்பதில், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதாவின் மரணத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் ஒரு காரணம் என்றும், அதனால் தான் அவர் சிறையில் இருப்பதாகவும் விமர்சித்தார்.
இதனிடையே விக்கிரவாண்டி அருகே பனையபுரத்தில் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சீன அதிபர் ஜின்பிங் - பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு வழங்கியதை வைத்து மட்டுமே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறந்து விளங்குவதாக கூற முடியாது என விமர்சித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து துணை முதல்வர் பன்னீர்செல்வம் தென்னமாதேவி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், எந்த காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று கூறினார்.
நெல்லை மாவட்டம் களக்காடு , ஏர்வாடி , சிதம்பரப்புரம் டோனாவூர் பகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக, அமைச்சர் விஜயபாஸ்கர் , அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோருடன் வாக்கு சேகரித்தார்.
இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் பிரசாரம் இன்று மாலையுடன் ஓயும் நிலையில், முக்கிய தலைவர்கள் சூறாவளி பரப்புரையில் ஈடுபட உள்ளனர். விக்கிரவாண்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.விக்கிரவாண்டி, சூரப்பட்டு, கஞ்சனூர், கணை உள்ளிட்ட இடங்களில் பரப்புரையில் ஈடுபடுவார் என தெரிகிறது. இதே போன்று அதிமுக அமைச்சர்கள் பலர் நாங்குநேரியில் பரப்புரையை முடிக்கின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் களக்காடு பகுதியில் தங்கள் பரப்புரையை முடிக்க உள்ளனர்.
Also See...
நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட முன்னீர்பள்ளம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டம்- ஒழுங்கை பேணிக் காப்பதில், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதாவின் மரணத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் ஒரு காரணம் என்றும், அதனால் தான் அவர் சிறையில் இருப்பதாகவும் விமர்சித்தார்.
இதனிடையே விக்கிரவாண்டி அருகே பனையபுரத்தில் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சீன அதிபர் ஜின்பிங் - பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு வழங்கியதை வைத்து மட்டுமே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறந்து விளங்குவதாக கூற முடியாது என விமர்சித்துள்ளார்.