முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முகவரி கேட்பது போல சிறுமியிடம் சில்மிஷம்.. பைக்கில் விரட்டிப் பிடித்த தந்தை

முகவரி கேட்பது போல சிறுமியிடம் சில்மிஷம்.. பைக்கில் விரட்டிப் பிடித்த தந்தை

சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர்

சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர்

ராணிப்பேட்டையில் 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த இளைஞரை, பைக்கில் துரத்தி செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ranipettai (Ranipet), India

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை தென்கடப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் 29 வயதான மணிகண்டன். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளமுள்ளுவாடி கிராமத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வழியில் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, பேனா வாங்குவதற்காக கடைக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஏரிக்கரை ஓரமாக உள்ள சாலையில் சிறுமி சைக்கிளில் தனியாக வருவதை கண்ட மணிகண்டன், அவரை நிறுத்தி தனது நண்பனின் வீட்டிற்கு செல்ல வழி கேட்டுள்ளார்.

சிறுமி சைக்கிளை நிறுத்தி விட்டு கீழே இறங்கி விலாசம் கூறுகையில், திடீரென மணிகண்டன், சிறுமியிடம் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறிதும் யோசிக்காமல் இளைஞரை எதிர்த்து செயல்பட்ட சிறுமி, அருகே இருப்பவர்களின் உதவிக்காக கூக்குரலிட்டார். சிறுமியின் எதிர் நடவடிக்கைகளால் பயந்துபோன இளைஞர் அங்கிருந்து தனது பைக்கில் தப்பிச் சென்றார்.அந்தச் சூழ்நிலையிலும் தெளிவாக சிந்தித்த சிறுமி, இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணை குறித்து வைத்துக் கொண்டார்.

உடனே வீட்டில் சென்று தனது தந்தையிடம் நடந்த விவரங்களை கூற, அவர் சிறுமியை அழைத்துக் கொண்டு புகார் கொடுப்பதற்காக ராணிப்பேட்டை காவல் நிலையம் வந்தார். அப்போது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் சிறுமியை கடந்து தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதை கவனித்த சிறுமி உடனே தந்தையிடம் கூற, அவர் தனது பைக்கில் அந்த இளைஞரை துரத்தி சென்றார். சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் பைக்கில் துரத்தி சென்ற நிலையில், அந்த இளைஞர் தப்பிச் சென்று விட்டார்.

இளைஞரை பைக்கில் துரத்தி செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. புகாரின்பேரில் ராணிப்பேட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மண்கண்டன் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து, மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.இக்கட்டான சூழ்நிலையில் தைரியமாக செயல்பட்ட சிறுமியையும், சிறுமிக்கு துணை நின்ற தந்தையையும் போலீசார் பாராட்டினர்.

First published:

Tags: Child Abuse, Crime News, POCSO case